திருக்குறள் பணிகள் ஆவணமாக்கல் –  முழு விவரம் தருக.

திருக்குறள் பரப்புப் பணிகள் குறித்த விவரங்களுக்காக உலகத் திருக்குறள் மையம் சார்பில் நிறுவனர் முனைவர் கு.மோகனராசு பத்திற்கு மேற்பட்ட பகிரிக் குழுக்களை அமைத்துள்ளார். அவற்றுள் திருக்குறள் சாதனைப்பதிவேட்டின் இயக்குநர்களாக முனைவர் கு.மோகனராசு அவர்களும் இலக்குவனார் திருவள்ளுவன் ஆகிய நானும் உள்ளோம்.

திருக்குறள் பரப்பல் ஆவணமாக்கும் முயற்சிக்காகப் பின்வரும்தகவல்கள்தேவைப்படுகின்றன. அவை, அருவினை அல்லது வரலாற்று நிகழ்வு அல்லது திருக்குறள் பணிகள் முதலான ஏதேனும் குழுவில் சேர்க்கப்படும். எனவே, நீங்கள் திருக்குறள் பரப்பல் தொண்டாக என்ன ஆற்றியிருந்தாலும் தெரிவிக்கலாம்.

 

  1. தங்கள் நாட்டில்/மாநிலத்தில்/பகுதியில் முதன் முதல் நடைபெற்ற திருக்குறள் மாநாடு/கருத்தரங்கம்/கூட்டம் நடத்தப்பட்ட நாளும் இடமும் சொற்பொழிவாளர் விவரமும்

 

  1. அவ்வாறு நடத்தியவர் / நடத்திய அமைப்பு

 

  1. திருக்குறள் ஒப்பித்தல் போட்டியை முதலில் நடத்தியவர்/நடத்திய அமைப்பு

 

  1. திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தியவர் / நடத்திய அமைப்பு

 

  1. திருக்குறள் தொடர்பான கட்டுரைப்போட்டி நடத்தியவர் / நடத்திய அமைப்பு

 

  1. திருக்குறள் தொடர்பான பேச்சுப்போட்டி நடத்தியவர் / நடத்திய அமைப்பு

 

  1. திருக்குறள் நாட்டியம் நடத்தியவர் / நடத்திய அமைப்பு

 

  1. திருக்குறள் நாடகம் நடத்தியவர் / நடத்திய அமைப்பு

 

  1. திருக்குறள் கலை நிகழ்ச்சி நடத்தியவர் / நடத்திய அமைப்பு

 

  1. திருக்குறள் பட்டிமண்டபம் நடத்தியவர் / நடத்திய அமைப்பு

 

  1. திருக்குறளைப் பரப்பவும் திருவள்ளுவரைப் போற்றவும் மேற்கொண்டபணிகள்

 

  1. திருவள்ளுவர் அல்லது திருக்குறள் பெயரிலான அமைப்பு விவரங்கள்

 

  1. திருக்குறள் சொற்பொழிவாற்றிய உங்கள் நாட்டவர்

 

  1. திருக்குறள் சொற்பொழிவாற்றிய வெளி நாட்டவர்

 

  1. நீங்கள் / உங்கள் அமைப்பினர் ஆற்றிய திருக்குறள் தொண்டுகள்

 

  1. திருக்குறள் ்அல்லது திருவள்ளுவர் பெயரில் வழங்கப்பெற்ற விருதுகள் விவரம்

 

  1. திருக்குறள் அல்லது திருவள்ளுவர் பெயரில் வழங்கப்பெற்ற பட்டங்கள் விவரம்

 

  1. திருக்குறள் அல்லது திருவள்ளுவர் தொடர்பான ஆவணப்படம் எடுக்கப்பட்டிருப்பின் விவரம்

 

  1. திருக்குறள் அல்லது திருவள்ளுவர் தொடர்பாக எழுதிய / வெளியிட்ட கட்டுரைகள்/நூல்கள் / மலர்கள் / இதழ்கள் விவரம்

 

  1. நீங்கள் வாழும் நாட்டு மொழியில் திருக்கறள் மொழிபெயர்ப்பு விவரம்
  2. ஆவணமாக்கக் கருதும் பிற விவரங்கள்

இவற்றை யெலலாம் கூடியவிரைவில் அனுப்பி வைக்குமாறும் தேவையான ஒளிப்படங்கள், செய்தி நறுக்குகள் இருப்பின் அவற்றையும் அனுப்பி வைக்குமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

 நனி நன்றி.

 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்