முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
முனைவர் வா.செ. குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முனைவர் வா.செ.குழந்தை சாமி அறக்கட்டளையின் தலைவர் ப. தங்கராசு வெளியிட்டுள்ள அறிக்கை:
முனைவர் வா.செ.குழந்தை சாமி அறக்கட்டளை சார்பில் கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
நிகழாண்டுக்கான விருதுக்குத் தொல்லியல், கல் வெட்டியல், நாணயவியல், அகழாய்வு, பலதொழில் துறைகளில் பயன்படுத்தியுள்ள, ஆனால் அகராதிகளில் இது வரை இடம்பெறாத புதிய சொற்களின் தொகுப்பு, மொழிச் சீர்திருத்தம், சமுதாயச் சீர்திருத்தம், முன்னேற்ற சிந்தனை கொண்ட முத்தமிழ் படைப்புகள் போன்ற பொருள்களில் ஒன்றைக் கொண்ட நூல்கள் வர வேற்கப்படுகின்றன.
தேர்ந்தெடுக்கப்படும் நூலின் படைப்பாளிக்கு, முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருதுடன் முதல் பரிசாக உரூ.30,000, இரண்டாம் பரிசாக உரூ.20,000, மூன்றாம் பரிசாக உரூ.10,000 வழங்கப்படும்.
நிபந்தனைகள் : 1)நூல் படைப்பு 2018 -ஆம் ஆண்டில் இருக்க வேண்டும். 2) நூலின் இரு படிகளை அனுப்ப வேண்டும். 3)நூலை அனுப்பி வைக்க வேண்டிய கடைசி நாள் :
ஆனி 15, 2050 / சூன் 30, 2019.
விருதும், பரிசுகளும் வழங்கும் நாள்
ஆடி 05, 2050 – சூலை 21, 2019.
நூலை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
ப. தங்கராசு, தலைவர், முனைவர் வா.செ.குழந்தை சாமி கல்வி ஆய்வு அறக் கட்டளை தமிழ் மேம்பாட்டு விருது, 5/45, எல்.ஆர்.சி. நகர், ஆண்டாங்கோவில் கிழக்கு கரூர் – 639 008.
Leave a Reply