இலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி, சனவரி 07
சென்னையில் ஃபகீமிய்யா பதிப்பகம் நடத்தும்
இலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி
முகிப்புல் உலமா முகம்மது மஃரூபு பங்கேற்பு
சென்னையில் ஃபகீமிய்யா பதிப்பகம் சார்பில் இலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி
மார்கழி 23, 2051 / 07.01.2020 வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு எழும்பூர் தே.ப.ச.(இக்குசா) மையஅரங்கில் நடக்க இருக்கிறது.
இந்த அரங்கம் கன்னிமாரா நூலகம் – அரசு அருங்காட்சியகம் எதிரில் அமைந்துள்ளது.
நிகழ்ச்சிக்கு இசுலாமிய இலக்கியக் கழகத் தலைவர் பேராசிரியர் முனைவர் சேமுமு. முகமதலி தலைமை வகிக்கிறார்.
உரூமியின் கவிதை நவீன நோக்கில் என்ற தலைப்பில் அசுவத்து சரீஅத்தி சீருரை நிகழ்த்துகிறார்.
இலக்கிய வானில் உரூமியின் மசுனவி என்ற தலைப்பில் முகிப்பில் உலமா கவிஞர் ஏ. முகம்மது மஃரூபு ( துபாய்) சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
முகம்மது இரிழ்வான் தீன் இசை வழங்குகிறார்.
உரூமியின் நேயர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஆளுமைகள் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
தொடர்புக்கு : 98 415 67213 / 97 909 67 213
மார்கழி 23, 2051 / 07.01.21 வியாழன்
Leave a Reply