உண்மையில் சுவாதியைக் கொலை செய்தது யார்? – கருத்தரங்கம்
உண்மையில் சுவாதியைக் கொலை செய்தது யார்? –
கருத்தரங்கம்
ஆடி 15, 2047 – 30-7-16 சனிக்கிழமை மாலை 6.00
40 பக்தவச்சலம் சாலை , திசில்வா சாலை விரிவு,
மயிலாப்பூர், சென்னை.
உங்கள் வருகையை உறுதி செய்ய அழைக்கவும்
பாலசுப்பிரமணியன் 9042905783
சேலை அணிந்தால்
காற்றில் பறந்த மாராப்பினால்
இடை தெரிந்துதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்…
காற்சட்டை – சட்டை அணிந்தால்
உடலோடு ஒட்டிய ஆடைதான்
என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்…
பாவாடை – சட்டை அணிந்தால் கெண்டைக்கால் தெரிந்ததுதான்
என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்…
முழுதாய் முக்காடிட்டால் கைவிரலும், கால்விரலும் தெரிந்துதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்…
பழங்காலம் போல் அடுக்களையிலேயே பெண்ணை விட்டு வைத்தாலும்
பெண் என்பவளை நான் பார்த்ததே இல்லை அது தான் என் உணச்சியைத் தூண்டியதென்பாயோ..???
உணர்வுத் தூண்டல்
உடை எம் தவறெனில் மன்னிப்பு கோருவேன்…
வணங்கும் உடை ஒன்று சொல்..?
நான் தரிக்கிறேன்
அதை மீறி எனை தப்பர்த்தம் கொண்டால் உன் தோலுரிக்கிறேன்…
உணர்வுகளின் தூண்டல்
மனித இயல்பு
மறுக்கவில்லை நான்…
மனமொன்று எமக்கும் உண்டு
மறுப்பாயா..நீ..?
நான்
என் செய்தால்
உனை ஈன்றவளுக்கீடாய்
எனைப் பார்ப்பாய்…ஆண்மகனே..???
இப்படிப் பிச்சை கேட்பதால் ஒரு பயனும் இல்லை
எது நடந்தால் இது போன்ற குற்றங்கள் நடக்காதோ அதைக் கேட்க வேண்டும்
எது காரணியோ அந்தக் காரணியைக் கண்டறிந்து வேரறுக்க வேண்டும் ?
இன்னொரு இராம்குமார் உருவாகாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் ?
இந்த உடைகளில்தான் கவர்ச்சி
இப்படிப் பார்ப்பதே மகிழ்ச்சி
இப்படி இந்த அங்கங்களை இப்படித்தான் பார்க்கவேண்டும் என நெருக்கத்தில் சொல்லித்தந்ததன் விளைவே காமத்தின் தூண்டலால் கட்டுப்படுத்த இயலாத பெண்ணாலும் ஆணாலும் பாலியல் துண்டால் குற்றங்கள் நடைபெறுகின்றன என்று நாம் அறிவோம்.
அதுமட்டுமல்ல விளம்பரம் மூலம் கறிக்கோழிகளாக நமது பிள்ளைகளை வளர்க்கும் இன்றைய உணவு முறைகளும் வரம்பு கடந்த வளர்ச்சி மற்றும் பாலுணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதை அறியாமல் உண்ணத் தருகின்றோம்.
ஆனாலும் ,
வீட்டின் வரவேற்பறையில் துணுக்குகள், சிறப்புக் காட்சிகள், காதல் காட்சிகள் என விதம் விதமாய் விரசங்களைக் காட்டும் போது இரகசியமாய் அல்ல வெட்கமில்லாமல் பிள்ளைகளுடன் அமர்ந்து பார்த்து இரசிக்கும் நமது மன மாசுதான் பிள்ளைகளுக்கும் உள்ளது
வீட்டின் வரவேற்பறையில் 24 மணி நேரமும் ஆபாசம் முக்கல் முனகல் காட்சிகளையும் வன்முறைக் காட்சிகளையும் காட்டிப் பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிஊடகங்களையும் திரைப்படங்களையும் கண்காணித்துத் தடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை
உங்கள் வீட்டில் தொலைக்காட்சியில் ஆபாச விளம்பரங்கள், திரைப்படத் துணுக்குக் காட்சிகள், குடும்ப வன்முறையை – பாலியல் உணர்வைத் தூண்டும் பெண்களுக்கெதிரான இந்தக் காட்சியைக் கண்டாலும் உடனடியாகப் புகார் அனுப்புங்கள்.
இன்று இராம்குமார் யாரோ! நாளை அது நமது பிள்ளையாக . இருக்கலாம்!.
இன்று சுவாதி யாரோ! நாளை நமது பிள்ளையாக இருக்கலாம் !
இவற்றுக்குக் காரணமான மனமாசு (MIND POLLUTION ) ஏற்படாமல் தடுக்கப் புகார் செய்வோம்! நடவடிக்கை கோருவோம்!
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்
தேவநேய ப் பாவாணர் நூலகம்
2 – ஆவது தளம்
அண்ணா சாலை
சென்னை 600002
பேசி : 044 – 28592750.
Leave a Reply