காஞ்சி மாவட்ட உலகத் திருக்குறள் பேரவை 9ஆம் ஆண்டு விழா -போட்டிகள்
<utpkaanchi@gmail.com>
அன்புடையீர் வணக்கம்
வாழிய நலத்துடன்
உலகத் திருக்குறள் பேரவை
•காஞ்சிபுரம் மாவட்டம்•
9ஆம் ஆண்டு விழா -போட்டிகள்
பொது:
1) கட்டுரைத் தலைப்பு – சமயம் கடந்த சமநீதி நூல்
2) மரபுக் கவிதைத் தலைப்பு – வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
3) புதுக்கவிதைத் தலைப்பு – ஈரடியால் உலகளந்தான்
கல்லூரி மாணவர்க்கு:
1) கட்டுரைத் தலைப்பு – இருளறுக்கும் மங்கல விளக்கு
2) மரபுக் கவிதைத் தலைப்பு – எல்லாப் பொருளும் இதன்பால் உள
3) புதுக்கவிதைத் தலைப்பு – செந்தமிழில் விளைந்த செப்பரும் முப்பால்
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு:
1) கட்டுரைத் தலைப்பு – வள்ளுவரே வாழ்வியல் ஆசான்
2) மரபுக் கவிதைத் தலைப்பு – அமிழ்தினும் இனியது திருக்குறள்
3) புதுக்கவிதைத் தலைப்பு – முப்பாலுக்கு இணையாய் எப்பாலும் இல்லை
திருக்குறள் தொடர்புடைய சிறந்த நூல்கள்: (இருபடிகள் அனுப்புக)
1) கட்டுரை
2) மரபுக்கவிதை
3) புதுக்கவிதை
ஒவ்வொரு தலைப்புக்கும்
முதல் பரிசு உரூ.3000 – சான்றிதழ்
இரண்டாம் பரிசு உரூ.2000 – சான்றிதழ்
மூன்றாம் பரிசு உரூ.1000 – சான்றிதழ்
கட்டுரைகள் ஏ4 தாளில் 4 பக்கங்களுக்கு மிகாமலும், கவிதைகள் 32 வரிகளுக்கு மிகாமலும் இருத்தல் நலம்.
படைப்புகள் வந்து சேர வேண்டிய நாள் : 31.12.2015
விழாவும் பரிசளிப்பும் 31.01.2016
அனுப்ப வேண்டிய முகவரி:
கவிஞர் புதுகை வெற்றிவேலன்,
தலைவர், உலகத் திருக்குறள் பேரவை காஞ்சிபுரம் மாவட்டம்,
கவியகம், 2 டாக்டர் இராதாகிருட்டிணன் சாலை,
பார்வதி நகர், பழைய பெருங்களத்தூர்,
சென்னை – 600 063.
அலை பேசி – 9444521773, 9884941773
நன்றி
அன்புடன்
தி.ஞானபாலன்
(ஒருங்கிணைப்பு – 9283168278)
இப்பொழுதெல்லாம் நிறைய அமைப்புகளும் நிறுவனங்களும் தமிழை வளர்க்கும் வகையில் இப்படி நிறையவே எழுத்துப் போட்டிகளை நடத்துகின்றன. இந்த நல்ல வழக்கம் போற்றி வரவேற்கப்பட வேண்டியது என்பதில் ஐயமில்லை. ஆனால், அனைவருமே முதலாம் – இரண்டாம் – மூன்றாம் பரிசுடனே நிறுத்திக் கொள்வது ஏன் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. முன்பெல்லாம் போட்டி என்று ஒன்று வைத்தால் ‘ஆறுதல் பரிசு’ என்று ஒன்று தருவார்கள். அந்தப் பழக்கம் ஏன் இப்பொழுது இல்லை? ஆறுதல் பரிசு பணமாக இருக்க வேண்டிய தேவையில்லை; இருக்கவும் கூடாது. மாறாக, நல்ல நூல்களை ஆறுதல் பரிசுகளாக வழங்கலாமே! புதிய நூல்களைத்தான் வழங்க வேண்டும் என்பது கூட இல்லை. இன்றும் பழந்தாள் கடைகளுக்குப் போனால் நல்ல நிலையில் இருக்கிற, பயனுள்ள நூல்கள் படிப்பாரன்றிக் குப்பை போல் கிடக்கின்றன. தவிர, தமிழாசிரியர்கள், தமிழ் உணர்வு அமைப்புகள், மூடும் தறுவாயிலுள்ள நூலகங்கள் ஆகியோரிடத்திலும் நல்ல நிலையில் அருமையான நூல்கள் நிறையவே கிடைக்கும். அப்படி இவை எதுவுமே இல்லாவிட்டாலும் பரிசு வழங்கும் விழாவுக்கு ஆகும் செலவில் ஏதாவது ஒரு சிறு பகுதியைக் குறைத்துக் கொண்டால் கூடப் போட்டியில் கலந்து கொள்பவர்களில் தகுதியுள்ள சிலரைத் தேர்ந்தெடுத்து ‘ஆறுதல் பரி’சாக நூல்களை வழங்கலாம். இதனால் படிக்கும் பழக்கம் ஊக்குவிக்கப்படும். எழுத்துப் போட்டிகளில் தோற்று எழுத்தாளராகத் தமிழுக்குச் சேவை புரிய முடியாமல் போகிற அவர்கள் படிப்பாளியாகத் தமிழுக்குத் தங்கள் தொண்டைத் தொடர இந்தப் பரிசளிப்பு உதவும். போட்டிகள் நடத்தும் அன்பர்கள் இதைப் பரிசீலிக்க வேண்டுகிறேன்!
வணக்கம்
வாழிய நலத்துடன்
தங்களின் கருத்து சிறப்பானது. தாங்கள் பல பரிசளிப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டு காணுங்கள். புத்தகப் பரிசளிப்பின் போது பரிசு பெறுவோர் முகத்தையும் பார்வையாளர் முகத்தையும். அவர்களின் முகக் குறிகள் பல்வேறு கோணங்களில் போய் இருக்கும். இதை எல்லாம் அறிந்த நிகழ்வாளர்கள் அத்தகைய ஆறுதல பரிசுகளைத் தவிர்த்திட்டனர் என்றே எண்ணுகிறேன். அதேபொழுது, யான் கலந்து கொள்ளும் நிகழ்வுகளிலும், பள்ளி நிகழ்வுகளிலும் மாணவர்களுக்கு கவிதை மற்றும் கட்டுரை நூல்களை அன்பளிப்பாக வழங்குவதை வழக்கமாக்கி உள்ளேன். தங்களின் எண்ணம் போற்றத்தக்கதே. இன்னும் விரிவாக இனிவரும் காலங்களில் நிகழ்வுகளில் இதனை கைக்கொள்ள விழைகிறேன். நன்றி.