அழை-சப்பான்தமிழ்ச்சங்கம், ஓவியப்போட்டி : sappan thamizhchangam_sallikkattu

சல்லிக்கட்டை வலியுறுத்தி சப்பானில் மாபெரும் ஓவியப்போட்டி.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்துகள்!!

நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக இந்த ஆண்டு மாசி 01, 2047 / பிப்பிரவரி 13ஆம் நாள் நடைபெறவிருக்கும் நமது பொங்கல்விழாவை முன்னிட்டுச் சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு ஓவியப்போட்டி நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த வருடம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்குமாகச் சேர்த்து மொத்தம் மூன்று இடங்களில் நடத்தப்படவுள்ளது.

நடைபெறும் இடங்கள்:

1.கொஅனா இன்டர்நேசுனல்,கவாசாகி

[Kohana International school,Kawasaki]

2.சேய்சின்சோ சமூக கூடம், நிசிகசாய்

[Seishinchou community hall,Nishi Kasai]

3. யூஆர் அரங்கம்,ஓசிமா

[UR Hall, Ojima]

கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு ஓவியத்தாள்கள் அளிக்கப்படும்.

வண்ணப்பூச்சுகள் மற்றும் வண்ணக்கரிக்கோல்களை கொண்டுவரவும்.

வெற்றிபெறுபவர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் உண்டு.

கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளும்படிக் கேட்டுக்கொளகிறோம்.

தொடர்புக்கு:-  japantamilsangam@gmail.com

பொறுப்பாளர்கள் :

கவாசாகி:

திரு.தேசிங்கு

திரு.இளையராசா

நிசிகசாய் தோக்கியோ :

திரு. பிரசன்னா

திரு.சங்கர்

ஓசிமா தோக்கியோ:

திரு.ப.கலைச்செல்வன்

திரு.பத்மநாபன்

திரு.பெ.கலைச்செல்வன்

சல்லிகட்டை வலியுறுத்தி நடத்தப்பெறும் இப்போட்டியில் தாய்த்தமிழுறவுகள் பெருவாரியாகக் கலந்துகொண்டு ஆதரவை நல்கிடக் கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙனம்
சப்பான் தமிழ்ச்சங்கம்

சே சதீசுகுமார்