புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை

தமிழறிஞர் மன்னர்மன்னன் 96 ஆவது பிறந்த நாள்

மாணவர்களுக்கான ஓவியப்போட்டி.


புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மைந்தரும் முதுபெரும் தமிழறிஞருமான கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்மாமணி மன்னர் மன்னன் ( கோபதி) அவர்களின் 96 ஆவது பிறந்த நாள் வரும் 03/11/2023 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டுப் புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாணவர்கள் பங்கேற்கும் ஓவியப்போட்டி நடைபெற ஏற்பாடு ஆகியுள்ளது.
தலைப்பு : கலைகள் வளர்த்திடுவோம்!
( மன்னர் மன்னன் அவர்களின் கவிதை வரி )
எவ்வகை ஓவியமாகவும் இருக்கலாம்.
ஓவியம் வரைய வேண்டிய பொருட்களை மாணவர்கள் கொண்டு வரவேண்டும்.
போட்டியில் பங்கேற்க என்ற 9486748522 புலன எண்ணில் (வாட்சு அப் ) வரும் 18/10/2023 நாளுக்குள் பெயர், வயது, கல்வி, கல்வி நிறுவன விவரம் இவற்றுடன் புலன எண் ( வாட்சுஅப் ) உள்ளிட்ட விவரங்களுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்கள்- கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்.
75 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.முதலில் பதிவு செய்பவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டிதழ் வழங்கப்படும்.
பரிசு விவரம்:-
மொத்த பரிசுத்தொகை உரூபாய் 5000/-
(தேர்வு பெறும் பத்து ஓவியங்களை வரைந்த பள்ளி மாணவர் ஏழுபேர்  கல்லூரி மாணவர் மூன்று பேர் என ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500/- வழங்கப்படும் .)

நிகழ்விடம்:
பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகம்,
115, பெருமாள் கோயில் தெரு,புதுச்சேரி -605001.

நாள் : ஐப்பசி 17, 2054 – 03/11/2023  வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் 12.00 வரை

தொடர்புக்கு
கலைமாமணி முனைவர் கோ. பாரதி
தலைவர்,
பாரதிதாசன் அறக்கட்டளை, புதுச்சேரி
பேசி : 86676 09521.
பங்கேற்க வருக.