சப்பான் தமிழ்ச்சங்கத்தின் கோடைவிழா
சப்பான் தமிழ்ச்சங்கத்தின் கோடைவிழா
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! சப்பான் தமிழ்ச்சங்கத்தின் கலை – பண்பாட்டுத் துறையின் சார்பாக இந்த ஆண்டு கொண்டாட விழைந்திருக்கும் கோடைவிழா வரும் புரட்டாசி 16 / அக்டோபர் மாதம் 3ஆம் நாள் “வணக்கம் தமிழகம்” என்ற பெயரில் நடைபெறவிருக்கின்றது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோக்கியோ மாநகரில் கொண்டாடப்படவுள்ள இவ்விழாவில் ஆடவர், பெண்டிர், குழந்தைகளுக்கான நமது பரம்பரை விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன.
உடல்நலம் காக்கும் நம் தமிழர்களின் விளையாட்டுகளையும் ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற நம் பரம்பரை உணவு முறைகளையும் இன்றைய தலைமுறைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்லும் நோக்கில் கொண்டாடப்படவுள்ள இவ்விழாவிற்கு நம் தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் ஆதரவு நல்கிட வேண்டுகிறோம்.
சப்பான் நாட்டைச்சேர்ந்தவர்களுக்கு நம்முடைய பண்பாட்டைத் தெரியப்படுத்தும் வகையில் சப்பான் நாட்டைச் சேர்ந்தவர்களையும் இவ்விழாவிற்கு அழைத்துவரவும்.
தமிழர்களின் பரம்பரை விளையாட்டான சடுகுடு, உரி அடித்தல் மற்றும் ஆடவர் பெண்டிருக்கான வேறு பல தமிழக விளையாட்டுகள், கரகம் போன்ற கலைகள் இடம்பெற விருக்கின்றன.
பங்குபெற விரும்புவோர் தங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளையும் தெரியப்படுத்தவும்.
திறந்தவெளித் திடலில் நடக்கவிருக்கும் இவ்விழாவிற்கு அனுமதி இலவசம்.
எனவே இவற்றில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் நிகழ்ச்சி பற்றிய விவரத்தை நம்முடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படிக்கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் விழா பற்றிய மற்ற விவரங்கள் நமது உறவுகளுக்கு மிக விரைவில் அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்ப் பரம்பரை காப்போம்! தமிழராய்ப் பெருமை கொள்வோம்!! எம்இனமானச் சொந்தங்களே அனைவரும் வாரீர்!ஆதரவு தாரீர்!!
இங்ஙனம்,
சப்பான் தமிழ்ச்சங்கம்.
கலை – பண்பாட்டுத் துறை.
தொடர்புக்கு:- japantamilsangam@gmail.com
Leave a Reply