தமிழ்நலப்பணிகளைச் செயற்படுத்துக ! –புதுச்சேரி அரசிற்கு வேண்டுகோள்

        கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ்நலப்பணிகளைச் செயற்படுத்துக ! தனித்தமிழ்இயக்கம், புதுச்சேரிஅரசு கலை,பண்பாட்டுத்துறை அமைச்சர்க்கு வேண்டுகோள்!         தமிழ்ப் பணி,கலை,இலக்கியப் பண்பாட்டுப் பணிகள் ஆகியவற்றைக் கடந்த பல்லாண்டுகளாகப் புதுச்சேரிஅரசு கலை,பண்பாட்டுத்துறை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டு விட்டது. அவை வருமாறு: தொல்காப்பியர்விருது10ஆண்டுகளுக்குமேல் வழங்கப்படவில்லை. 2. சிறந்த நுால்களுக்கான கம்பன் புகழ்ப்பரிசு, நேருகுழந்தைகள் விருது, போன்றவைபலஆண்டுகளாக வழங்கப்படவில்லை.  புதுச்சேரி எழுத்தாளரகளின் நுால்கள் நுாலகங்களுக்கு வாங்கப்படவில்லை.  கடந்த 25ஆண்டுகளாக ஒரு புதிய கிளைநுாலகம்கூடத் திறக்கப்பட வில்லை. 5. இருக்கும் நுாலகங்களுக்கு நுாலகர்கள் அமர்த்தப்படவில்லை. உரோமன் உரோலந்து…

கலைகளால் செழிக்கும் செம்மொழி உரையரங்கம், சென்னை

இலக்கியவீதி – சிரீ கிருட்டிணா இனிப்பகம் இணைந்து நடத்தும் கலைகளால் செழிக்கும் செம்மொழி பங்குனி 29, 2048 ,  ஏப்பிரல் 11, 2017 மாலை 06.30 பாரதிய வித்தியாபவன் – மயிலாப்பூர், சென்னை 600 004 ‘செம்மொழி செழுமைக்கு நாடகக் கலையின் பங்கு’ தலைமை : நீதியரசர் பு. இரா. கோகுலகிருட்டிணன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் சிறப்புரை : கலைமாமணி  தி.க.ச.கலைவாணன் அன்னம் விருது பெறுபவர் : நாடகக் கலைஞர்  தி.க.ச.புகழேந்தி நிரலுரை : துரை இலட்சுமிபதி தகுதியுரை : செல்வி ப….

‘கலாச்சாரம்’ தேவையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

‘கலாச்சாரம்’  தேவையா? – இலக்குவனார் திருவள்ளுவன்   ‘கலையும் கலாச்சாரமும்’, ‘கலாச்சாரமும் பண்பாடும்’, ‘கலையும் கலாச்சாரமும் பண்பாடும்’ என்றெல்லாம் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். கலாச்சாரம் என்பதைப் பண்பாடு என்னும் பொருளில்தான் பெரும்பாலும் கையாள்கின்றனர். சில இடங்களில் கலை என எண்ணிக் கையாள்கின்றனர். கலை – பண்பாட்டுத்துறை என்பதைக் கலை – கலாச்சாரத்துறை என்றே குறிப்பிடுகின்றனர். எனவே, கலையும் கலாச்சாரமும் என்றால்  கலையும் பண்பாடும் என்று கருதுவதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், கலாச்சாரமும் பண்பாடும் என்றால் என்ன பொருள்? நாகரிகமும் பண்பாடும் என்று பொருள்  கொள்ள இயலவில்லை,…

பரதநாட்டியம் தமிழரின் கலையே! – மயிலை சீனி.வேங்கடசாமி

பரதநாட்டியம் தமிழரின் கலையே! – மயிலை சீனி.வேங்கடசாமி   பாரத நாட்டிலே பல நாட்டியக் கலைகள் உள்ளன. அவற்றில் பரதநாட்டியம், கதக், கதகளி, மணிபுரி நாட்டியங்கள் பேர் போனவை.   இவற்றில் தலைசிறந்த உயர்ந்த கலையாக விளங்குவது பரதநாட்டியம். இதைத் தமிழனின் தற்புகழ்ச்சி என்றோ, முகமன் உரை என்றோ யாரும் கருதக்கூடாது. உவத்தல் வெறுத்தல் இல்லாத மேல்நாட்டு ஆசிரியர் கூறும் கருத்தையே கூறுகிறேன். “இந்திய நடனங்களிலே பெருமிதம் உடையது (தலைசிறந்தது) பரத நாட்டியம்” என்று இந்திய நடனக் கலைகளைப் பற்றி ஆராய்ந்து எழுதிய ஓர்…

சப்பான் தமிழ்ச்சங்கத்தின் கோடைவிழா

சப்பான் தமிழ்ச்சங்கத்தின் கோடைவிழா அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! சப்பான் தமிழ்ச்சங்கத்தின் கலை – பண்பாட்டுத் துறையின் சார்பாக இந்த ஆண்டு கொண்டாட விழைந்திருக்கும் கோடைவிழா வரும் புரட்டாசி 16 / அக்டோபர் மாதம் 3ஆம் நாள் “வணக்கம் தமிழகம்” என்ற பெயரில் நடைபெறவிருக்கின்றது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோக்கியோ மாநகரில் கொண்டாடப்படவுள்ள இவ்விழாவில் ஆடவர், பெண்டிர், குழந்தைகளுக்கான நமது பரம்பரை விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன. உடல்நலம் காக்கும் நம் தமிழர்களின் விளையாட்டுகளையும் ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற நம் பரம்பரை உணவு…

தமிழ் எங்கணும் பல்குக! பல்குக!- பாவேந்தர் பாரதிதாசன்

நன்று தமிழ் வளர்க! – தமிழ் நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக! என்றும் தமிழ் வளர்க! – கலை யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக! இன்பம் எனப்படுதல் – தமிழ் இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக! – பாவேந்தர் பாரதிதாசன்

செஞ்சீனா சென்றுவந்தேன் 7 – பொறி.க.அருணபாரதி

  (ஆடி 11, 2045 / சூலை 27, 2014 இதழின் தொடர்ச்சி) 7. அழிவின் விளம்பில் சீனச் சிற்றூர்களும், கலைகளும்    சீன நகரங்களின் ‘வளர்ச்சி’ என்பது, சீனச் சிற்றூர்களின்அழிவிலிருந்தே தொடங்குகிறது. சீனாவின் புகழ்பெற்ற சீயான்சின்(Tianjin) பல்கலைக் கழகத்தின் கணக்கெடுப்பு ஒன்றின்படி, 2000ஆவது ஆண்டில் சீனாவில் சற்றொப்ப 3.7 பேராயிரம்(மில்லியன்) ஊர்கள்ள் இருந்தன. 2010ஆம் ஆண்டு, அது 2.6 பேராயிரமாகக் குறைந்துள்ளது. அஃதாவது, ஒரு நாளைக்கு 300 சீனச் சிற்றூர்கள் அழிந்து கொண்டுள்ளன. (காண்க: தி நியூயார்க் டைம்சு, 02.02.2014). இது சீன…