ஆவணி 24, 2047 / செட்டம்பர் 09, 2016

மாலை 4.30

தமிழ் இணையக்கல்விக்கழகம்

தொடர் சொற்பொழிவு 17 : ஓவியர் புகழேந்தி

அழை-தகவலாற்றுப்படை ;azhai_tha.i.ka.

ஓவியர் புகழேந்தி ; oaviyar pughazhendhi

ஓவியர்  திரு. புகழேந்தி  குறித்து 

ஓவியர், எழுத்தாளர் மற்றும் பேராசிரியர்.  குடந்தை  கவின் கலைக்கல்லூரியில் வண்ண ஓவியத்தில் இளங்கலைப் பட்டமும் ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் வண்ண ஓவியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சென்னை கவின் கல்லூரியில் தற்போது ஓவியத்துறைப்  பேராசிரியராகப் பணி புரிந்து வருகிறார். தமிழில் முதல் வண்ண ஓவியப் புத்தகமான ‘எரியும் வண்ணங்கள்’ என்னும் நூலை வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், அதிரும்கோடுகள், சிதைந்தகூடு, புயலின் நிறங்கள் என்ற தலைப்பில் இவரது ஓவியப்படைப்புகள் நூலாக வெளிவந்துள்ளன. தமிழக அரசின் மாநில விருது, இந்தியாவின் பன்னாட்டு விமானப் போக்குவரத்துக் குழுமம் விருது, இராசராசன் கல்வி பண்பாட்டு கழகத்தின் சாதனையாளர் விருது, எசு. ஆர். எம். பல்கலைக்கழக தமிழ்ப்பேராயத்தின் ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.

 அனைவரும் வருக! 

இயக்குநர்