தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்க மாவட்ட மாநாடு, திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் இலெட்சுமி விலாசு வங்கி மேல்மாடியில் எதிர்வரும் கார்த்திகை 4, 2045- 20.11.2014 அன்று மாலை 5 மணியளவில் மாநாடு நடைபெற உள்ளது.
இதன்தொடர்பாகச் செய்தியாளர்களிடம் கூறிய தமுஎகச அமைப்பைச்சேர்ந்த கவிவாணன் கூறுகையில்,
விடுதலைப்போராட்டத்தில் நம்நாட்டு விடுதலைக்காகத் தன்னையே ஒப்படைத்துக்கொண்ட சுப்பிரமணிய சிவா,
தமிழகத்தில் இரண்டாவது முழு நீளப் புதினமான கமலாம்பாள் சரித்திரம் எழுதிய நாவலாசிரியர் இராசம்(அய்யர்),
மணிக்கொடி இதழின் ஆசியரான ‘மணிக்கொடி சிறுகதைகள்’ என்ற நூலுக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும் திரைப்பட உரையாடலாசிரியருமான பி.எசு.இராமையா,
‘எழுத்து’ என்ற இதழைத் தொடங்கிப் புதுக்கவிதைக்கு வளம் சேர்த்தவரும் ‘சுதந்திர தாகம்’ என்ற புதினத்திற்காகச் சாகித்ய அகாதமி விருதுபெற்றவருமான எழுத்தாளர் சி.சு.செல்லப்பா
போன்றவர்களை நினைவூட்டும் வகையில் வத்தலக்குண்டு மண்ணில் கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்தில் மிக முதன்மையான பங்களிப்பை நல்கி வரும் தமிழகத்தின் முன்னோடி இலக்கிய இயக்கமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது.
எனவே, இலக்கிய அன்பர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு மாநாட்டைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
Leave a Reply