எண்என்ப   ஏனை   எழுத்துஎன்ப   இவ்விரண்டும்

கண்என்ப   வாழும்   உயிர்க்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 392)

தமிழ்ப்பள்ளிகளை          மூடாதே!

உரையரங்கம்

ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018

தே.ப.ச. (இக்சா) மையம் (கு/ஊ),

(அருங்காட்சியகம் எதிர்ப்புறம்),

எழும்பூர், சென்னை 600  008

தமிழ்த்தாய் வாழ்த்து: திருவள்ளுவர் தமிழ்வழிப்பள்ளி

வரவேற்புரை  :         த.தமிழ்த்தென்றல்

தலைமை      :               இலக்குவனார் திருவள்ளுவன்

தொடக்கவுரை:      முனைவர் க.ப. அறவாணன்

கருத்துரை   :

தமிழ்நிகழ்ச்சிச் செம்மல் பொறி. கெ.பக்தவத்சலம்

கல்வியாளர் முனைவர் இ.மதியழகி

எழுத்தாளர் மாம்பலம் ஆ,சந்திரசேகர்

கல்வியாளர் வெற்றிச்செழியன்

கல்வியாளர் இறை. பொற்கொடி

இதழாளர் ஆரா

அன்றில்   பா. இறைஎழிலன்

 

சிறப்புரை    :               தோழர்  தியாகு

நிறைவுரை :               முனைவர்   பொன்னவைக்கோ

தீர்மான உரை:   கவிஞர் வா.மு.சே.திருவள்ளுவர்

நன்றியுரை  :               அக்கினி சுப்பிரமணியம்

தமிழ்ப்பள்ளிகளை நிலை நிறுத்திட

அன்புடன்  அழைக்கும்

தமிழ்க்காப்புக் கழகம்

தமிழ்வழிக்  கல்விக்கழகம் 

தாய்த்தமிழ்க் கல்விப்பணி      

 தமிழ் அமைப்புகள்

தாய்த்தமிழ்ப் பள்ளிகள்

 

அன்புடன்    வேண்டுகிறோம்!

தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியும் தமிழ் மொழிக்கல்வியும் வேண்டும் எனப் போராடும் அவலம் இன்னும் உள்ளது வேதனையாக உள்ளது. ஆண்டுதோறும் அரசு தமிழ்வழிப் பள்ளிகளை மூடி வருகிறது. 2012-13 இல் 320 பள்ளிகளிலும் 2013-14 இல் 3200 பள்ளிகளிலும் ஆங்கில வழிப்பிரிவுகள்தொடங்கப்பட்டன. இவ்வாறு ஆண்டுதோறும் ஆங்கில வழிப்பிரிவுகள் தொடங்கப் பட்டதால், 4.84.498 பேர் தமிழ்வழிக்கல்வியை இழந்தனர். இதைத் தொடர்ந்து 2017-2018 இல் ஆங்கிலவழிக் கல்வித் திணிப்பு அரங்கேறியுள்ள அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை 3.916. இவ்வாண்டில் ஏறத்தாழ 890 பள்ளிகைள மூடுவதாகச் செய்தி வந்தது. அரசு அப்படி எண்ணம் இல்லை என்று சொன்னாலும்  நம்பிக்கை இல்லை. ஏனெனில், இதனை எதிர்க்க வேண்டிய திமுக உறுப்பினர்களே ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்க வினா தொடுக்கிறார்கள். கல்வியமைச்சரும் நடவடிக்கையில் உள்ளதாகக் கூறுகிறார். தமிழ்வழிப்பள்ளி செயல்பட்ட இடங்களில் ஆங்கிலவழிக்கல்வி கொண்டு வர எண்ணுகிறார்கள். ஆங்கில வழிக்கல்வி என்பதும் தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்துவதுதான்.

ஆழமாகக் கற்க வேண்டிய மொழிக்கல்வியைச் சிதைக்கும் வகையில் அரசு. (தமிழ்)மொழித் தேர்வுத்தாள் இரண்டாக இருந்ததை ஒன்றாகக் குறைத்துள்ளது. பள்ளிக் கல்வியமைச்சர் செங்கோட்டையன் கல்வித்துறை சிறப்பாக இருக்க

வேண்டும் என்று விரும்புபவர்தான். ஆனால் மொழி தொடர்பான முடிவுகளை ஆங்கில மையல் கொண்ட அதிகாரிகளின் கருத்திற்கேற்ப எடுக்கக்கூடாது.

தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி நிலைப்பதற்காகப் பின்வரும் நடவடிக்கைகளை மாண்புமிகு முதல்வர் எடுக்க  வேண்டும்.

  1. ‘கூட்டுறவுக் கல்விநிலையங்கள் சட்டம் 2018’ என ஒன்றை உருவாக்க வேண்டும். இச்சட்டத்தின் அடிப்படையில் தாய்த்தமிழ்ப்பள்ளி பொறுப்பாளர்கள், தமிழ் அமைப்புகள், பெற்றோர்கள், ஆசிரியர்களைக் கொண்டு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்திக் கூட்டுறவுக் கல்வி நிலையங்களை அமைக்க வேண்டும்.
  2. மூடக்கருதியுள்ள கல்வி நிலையங்களையும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள கல்வி நிலையங்களையும் கூட்டுறவு அமைப்பில் இணைக்க வேண்டும்.
  3. எல்லாத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளையும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளாக மாற்றித் தேவைப்படும் உதவிகளைப் புரிய வேண்டும்.

4, தமிழ்நாட்டில் கல்வி என்றால் தமிழ்வழிக்கல்விதான் என்னும் நிலையை ஏற்படுத்த  வேண்டும்.

பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வி உள்ளமைபோல் கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி வேண்டும் எனத் தமிழ் உரிமைப் பெருநடைப்பயணம் மேற்கொண்டு இந்தியப்பாதுகாப்புச்சட்டத்தில் தளையிடப்பட்டார் தமிழ்ப்பேராசிரியர் சி.இலக்குவனார். இன்றைக்குப் பள்ளிகளில் உள்ள தமிழும் அகற்றப்பட்டு வருகிறது. எனவே, தமிழ்ப்புலவர்கள். தமிழாசிரியர்கள். தமிழன்பர்கள். தமிழ் அமைப்பினர். கல்வியாளர்கள், பிறர் என அனைவரும் ஒன்றுபட்டுத் தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி நிலைக்கவும் தமிழ்மொழிக்கல்வி சிறப்புறவும் ஆவன செய்ய வேண்டும்.