கார்த்திகை 22, 2047 / 07.12.2016 அன்று

கே.எசு.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள,
திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உரைநயங்களும்

என்ற தலைப்பில் நடைபெறும் இரண்டாவது பன்னாட்டுக் கருத்தரங்கத்துக்குப்

பல்வேறு மொழிகளில் திருக்குறளின் மொழிபெயர்ப்புகளையும் பல்வேறு உரையாசிரியர்களின் உரை நயங்களையும் ஒப்பீட்டு முறையிலும் திறனாய்வு முறையிலும் எடுத்துரைக்கும் ஆய்வுக்கட்டுரைகள் வந்துள்ளன. கட்டுரை அனுப்பிய பேராளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்

கட்டுரை வழங்குவதற்கான இறுதி நாள்  ஐப்பசி 22, 2047 / 07.11.2016.

திருக்குறள் மொழிபெயர்ப்புகள் குறித்தோ உரைகள் குறித்தோ எழுதப்படும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

சிறந்த கட்டுரைகளுக்குப் பரிசுகளும்

இக்கருத்தரங்கில் கலந்துகொள்பவர்களுக்கு

10 பேரயிரை எண்மம் (GB) கொள்ளவுள்ள தமிழ் மின்னூல்களும், ஆங்கில இலக்கிய மின்னூல்களும், ஆவணப்படங்களும் இலவசமாக வழங்கப்படவுள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அழை- திருக்குறள் கருத்தரங்கம், திருச்செங்கோடு01 ; azhai_thirukkural_karutharangamthiruchengodu01 அழை- திருக்குறள் கருத்தரங்கம், திருச்செங்கோடு02 ;azhai_thirukkural_karutharangamthiruchengodu02

முனைவர் இரா. குணசீலன்