நிறை இலக்கிய வட்டத்தின் ஐந்தாம் ஆண்டு கம்பர் விழா
கவிமாமணி இளையவன் ஐதராபாதில் பல ஆண்டுகளாக ‘நிறை இலக்கிய வட்டம்’ நடத்தி வருகிறார். இளையவன் கையால் தொடப்பட்டு வளரும் இளம் கவிஞர்கள், பேச்சாளர்கள் மிகப்பலர். இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் நானும் இருக்கிறேன். என்னுடைய 17ஆவது வயதில் பாரதி கலைக்கழகத்தில் நான் கவிதை படிக்கக் காரணமாக இருந்தவர் கவிமாமணி இளையவன்.
இம்முறை வரும் ஃபிப்ரவரி 7ம் தேதி ஐந்தாவது ஆண்டு கம்பர் விழாவை நிறை அமைப்பு நடத்துகிறது. முழுநாள் விழா. அழைப்பிதழை இணைத்திருக்கிறேன்.
நாளின் இறுதி நிகழ்ச்சியாகப் பட்டிமண்டபமொன்று நடைபெறுகிறது. ‘கம்ப காவிய மேன்மைக்குப் பெரிதும் காரணம் வால்மீகியின் கொடையே, வழிநூலின் நடையே’ என்று தலைப்பு. இந்தப் பட்டிமண்டபத்துக்கு நான் நடுவராக இருக்கிறேன். ஐதராபாதில் இருப்பவர்கள், கலந்துகொள்ள முடிந்தவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன் அரிகி
Leave a Reply