தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப்பின், ஆட்சியாளரின் பதவியை நிலைப்படுத்திக் கொள்வதற்கான விட்டுக் கொடுத்தல்களும் ஒத்துப்போதல்களும் எதிர்பார்த்த தமிழ்ப் பயன்களைத் தரவில்லை. இதனால் பேராசிரியர் இலக்குவனார் வேதனை உற்றார். உசுமானியாப் பல்கலைக்கழகத்திலோ, தமிழில் இருந்து பிறந்தனவே தெலுங்கு முதலான தமிழ்க்குடும்ப மொழிகள் என்னும் உண்மையை ஏற்காத தெலுங்குத் துறையினர் தெலுங்கின் மகள் தமிழ் என்றும் தெலுங்கின் தங்கை தமிழ் என்றும் உண்மைக்கு மாறான கருத்துகளைப் பரப்பி வந்தனர். அவர்களிடம் தமிழின் தொன்மையையும் தாய்மையையும் விளக்கினார்….

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) இன்னா செய்தாரை இனிமைச் செயல்களால்  ஒறுத்தல் நன்றென உரைத்த பொருளுரை  படித்து மேடையில் பாங்காய்ப் பொழிந்தும்  தமிழ்நலம் நாடிய தகைசால் உரையைப்  பொறுக்கலா ற்றாது வெறுக்கும் இயல்பால்  அரசின் சார்பில் அளிக்க இருந்த  பரிசைத் தடுத்த பரிசை  என்னென  நற்றமிழ்நாடே நவில்க! நற்றமிழ்த்  தொண்டு புரிதல் துயர்க்கே  கூட்டும்  தமிழ்ப் பகைத்தோர் தள்ளினர் சிறையில்  தமிழின் பேரால் தகுநிலை அடைந்தோர்  தமிழ்ப் புகழ்பாடினும் தமிழை அடக்கி  வாழவே முனையும் வன்கண்மையால்  இழக்கச்…

நிறை இலக்கிய வட்டத்தின் ஐந்தாம் ஆண்டு கம்பர் விழா

 கவிமாமணி இளையவன் ஐதராபாதில் பல ஆண்டுகளாக ‘நிறை இலக்கிய வட்டம்’ நடத்தி வருகிறார்.  இளையவன் கையால் தொடப்பட்டு வளரும் இளம் கவிஞர்கள், பேச்சாளர்கள் மிகப்பலர். இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் நானும் இருக்கிறேன்.  என்னுடைய 17ஆவது வயதில் பாரதி கலைக்கழகத்தில் நான் கவிதை படிக்கக் காரணமாக இருந்தவர் கவிமாமணி இளையவன்.  இம்முறை வரும் ஃபிப்ரவரி 7ம் தேதி ஐந்தாவது ஆண்டு கம்பர் விழாவை நிறை அமைப்பு நடத்துகிறது. முழுநாள் விழா.  அழைப்பிதழை இணைத்திருக்கிறேன்.   நாளின் இறுதி நிகழ்ச்சியாகப் பட்டிமண்டபமொன்று நடைபெறுகிறது. ‘கம்ப காவிய மேன்மைக்குப்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 06: ம. இராமச்சந்திரன்

     (அகரமுதல 103 ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) 6   1959ஆம் ஆண்டு மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணிபுரிய வருமாறு அழைப்புக் கிடைத்தவுடன் மதுரை சென்றார். கலைத்தந்தை தியாகராசச் செட்டியாரின் அரவணைப்பில் 1965 தொடக்கம் வரை மிகச் சிறப்பாகப் பணிபுரிந்தார். புலவர் விழா நடத்தி, மாணவர்களிடம் தமிழ் உணர்வையும் தமிழ்ப்பற்றையும் வளர்த்தார். தொல்காப்பிய ஆராய்ச்சி’16 என்னும் மிகச் சிறந்த ஆராய்ச்சி நூலையும் பழந்தமிழ்’17 என்னும் நூலையும் எழுதினார்.   மேலும் ‘குறள்நெறி’ என்னும் பெயரில்…