மங்கலதேவிக் கோட்டம்.
நூல் அறிமுகம்.
காப்பிய ஆக்கம்; சிங்கப்புரம்(சிங்கப்பூர்) கோ.அருண்முல்லை.

ஆனி 29, 2045 / சூலை, 13,2014 ஞாயிற்றுக் கிழமை சிங்கப்பூர் பொது நூலகத்தில் 5,ஆம் தளத்தில் நடக்கவிருக்கிறது

பூம்புகார், கடலில் மூழ்கிவிட்டது. பண்பாட்டு அடையாளம் யாவும் அதில்தொலைந்துபோனது என்று எவ்வளவு காலந்தான் சொல்லிக்கொண்டிருப்பது? அதை ஆய்வுசெய்தால் என்னவெல்லாம் நிகழும் என்ற கற்பனையே இந்தக் காப்பியம்.சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சிறப்பித்த பூம்புகார் காட்சியை காட்சியைஇன்றும் கண்டார்கள் என்பதாகக் கற்பனை செய்து அதைக் காப்பியமாகவடித்ரிருக்கிறார்.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோவில்எழுப்பிச் சிறப்பித்தான் என்பது வரலாறு.இன்று தங்களுடையது, அதில் தமிழர்கள்வழிபாடு செய்ய வரக்கூடாது என்றுகேரள நண்பர்கள் நம்மை தடுத்துக்கொண்டிருக்கின்றனர். மீண்டும் அதே இடத்தில் கோவிலை புதுப்பித்துக்கட்டுவதாக இக்காப்பியத்தை முடித்திருக்கிறார். இந்தக் கற்பனை உண்மையாகவேண்டும் என்பதே அவரது உள்ளக்கிடக்கையாக இக்காப்பியம் விவரிக்கின்றது.இக்காப்பியத்தில்கதைத் தலைவியாக வருபவள் கேத்தரின் என்கிற ஓர் ஐரோப்பியவெள்ளைக்காரி. ஏனெனில் இதுவரை நம் பெருமை அயலவர் சொல்லித்தான் நமக்குத்தெரிகிறது. உள்ளூர்காரன் மெனக்கெடவும் மாட்டான் அவன் ஆய்வை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்.

இக்காப்பியம், கடலில் மூழ்கிய பூம்புகாரைஆய்வு செய்வதாகக் காட்டுவதுதானேத்தவிர சிலப்பதிகாரக் காப்பியத்தைக்குறிப்பதல்ல. இக்காலத்தில் நிலவும் அரசியல், மக்கள் ஒழுக்கம்,நீதி இவற்றைகண்டால் சதுக்கப்பூதம் என்ன செய்யும் என்ற கற்பனையே தன்னைஇவ்வாறு எழுதத் தூண்டியதாக விவரிக்கிறார்.

மாரியம்மன் என நாம்வழிபடும் ஊரகத் தேவதைகள் அனைத்துமே ஒருகாலத்தில் கண்ணகித் தெய்வமாகவழிபட்டு வந்தவையே என்றும் அதில் மகாபாரம் படித்து அதைத் துரோபதைஅம்மனாக்க் காட்டுவதும் ஏமாற்று வேலையே என தனது ஆராய்ச்சியை நிறுவுகிறார்.

சலம் திரட்டுதல், சிலம்பெடுத்து ஆடிவரல், தீமிதித்தல் போன்றவைகண்ணகியோடு தொடர்புடையவையே! அரவான் சிலை எனப்படுவது உண்மையில்சதுக்கப்பூதமே! அம்மன் சிலைக்கு முன்னால்ரேணுகை தலையெனப்படுவது கோவலன்தலையே! எனவும் நிறுவுகிறார்.

கடந்த காலங்களில் இப்படி நடந்ததுஎன்பது வரலாறு. மாற்ற முடியாது. நிகழ்காலத்தில் இப்படி நடந்துகொண்டிருக்கிறது. என்பது நேரடிக் காட்சி மாற்ற முடிவது. ஆயினும்இப்படித்தான் நடந்து பின் திரிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்சிகளின்முரண்பாடுகளை வைத்துக்கண்டுபிடித்து அவற்றைமக்கள் மத்தியில்வெளிச்தமிட்டுக் காட்டி நெறிப்படுத்துவதில் தவறில்லை, அதனால் இப்படித்தான்நடந்திருக்கும் என்ற அவரது ஆசையின் வெளிப்பாடே இக்காப்பியம்.

நாத்திகவாதியான இவருக்கு முற்பிறவி, இப்பிறவி, மறுபிறவி என்பதில்உடன்பாடில்லாத போதிலும் இக்காப்பியத்தில் வரும் கேத்தரின் என்ற வெள்ளைக்காரமாதுகதைத்தலைவியாகவருபவள் இவள் முற்பிறவியில்கவுந்தியடிகளாகஇருந்தவள் என நிறுவிச் செல்கிறார்.

ஒருத்தனுக்கு ஒருத்தி என்றகடப்பாட்டுடன்வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தில் எப்படி ஐந்து ஆண்களுக்குமனைவியானதுரோபதை என்பவள் தமிழர் வழிபாட்டுக் காவல் தெய்வமாகஇருக்கமுடியும்? என்பதை ஆணித்தரமாக விளக்குகிறார்.

தமிழர்பண்பாடுஎன்பது ஊரக நடைமுறையிலான காவல், சிறு தெய்வங்கள்வழிபாட்டுமுறைகளைக் கொண்டது. ஆனால் ஆரிய படையெடுப்பின் பின்னர் ஊரகத்தேவதை வழிபாட்டு முறைகள், ஆரிய வழிபாட்டு முறைகளினால்முற்றாகமறைக்கப்பட்டு அல்லது மாற்றி அமைக்கப்பட்டு தற்பொழுதுள்ள அபத்தமானவழிபாட்டு முறைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளது என்பது. வந்தாரை வரவேற்றுவாழ , ஆள வழிவகை செய்துவிட்டு இருந்தாரை அழிந்துபோகவும்அடிமையாகவாழ்ந்துவருவது நம்தமிழினம்.

இனியாகிலும் நம் தமிழினம் திருந்தி, நமது கலாச்சாரத்தை காப்பாற்றாவிட்டால் நமது மண் விடுதலையும்இனவிடுதலையும் சாத்தியமில்லை.

mangaladevi+bookfunction01mangaladevi+bookfunction02

–          தொல்காப்பியன் தங்கராசன்