(சிங்கப்பூர்) உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னையில் – சூலை 7-9

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்(IATR) சிங்கப்பூரில் நடத்த இருந்த 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னையில் வரும்

ஆனி 22, 23 & 24, 2054 ****சூலை 07,08 & 09.2023

செம்மணஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடைபெறும். சென்னையில் நடைபெறுவதால் கூடுதலாகக் கட்டுரையாளர்களைத் தெரிவு செய்கின்றனர். கட்டுரையாளர்களுக்கு அனுப்பப்பெறும் அழைப்பு மடல்கள் வரும் திங்கள் இரவிற்குsள் அனுப்பப்படடு விடும் என இவ்வமைப்பின் தலைவர் முனைவர் பொன்னவைக்கோ தெரிவிததார்.

மாநாட்டை முன்னிட்டுப் பின்வரும் சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன.

1.நூல் வெளியீட்டு நிகழ்ச்சி

நூலாசிரியர்கள் தத்தம் நூலை வெளியிடுவதற்கு வாய்ப்பாக 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு அரங்கைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். வெளியீட்டு நிகழ்வில் தங்கள் நூல்களும் இடம் பெற விரும்புபவர்கள், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ளவர்கள், நூலின் பெயர், நூலாசிரியர் பெயர், வெளியீட்டாளர் பெயர், நூல் விலை, தொடர்பு முகவரி, பேசி எண், மின்வரி முதலிய விவரங்களைத் தமிழில் வரும் வைகாசி 32 / சூன் 15 ஆம் நாளுக்குள் மாநாட்டுக் குழுவிற்குத் தெரிவிக்க வேண்டும். மின்வரி: < organizing-committee@icsts11.org > . வெளியீட்டில் இடம் பெற விரும்பும் நூல் ஒவ்வொன்றின் ஐந்து படிகளை ஆனி 15 / சூன் 30 ஆம் நாளுக்குள் மாநாட்டு முகவரிக்குக் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

2. நூல் விற்பனை அரங்கம்

உலகத்தமிழறிஞர்களும் தமிழன்பர்களும் கூடும் மாநாட்டின் பொழுது தத்தம் நூல்களை விற்கவும் அறிமுகப்படுத்தவும் மாநாட்டு நூல் விற்பனை அரங்கத்தைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். வெளியீட்டாளர்களாக உள்ள நூலாசிரியர்களும் சிறிய பதிப்பகத்தாரும் புத்தகக் கண்காட்சிகளில் பங்கேற்க இயலாமல் வருந்துகின்றனர். அவர்களின் வருத்தத்தைத் துடைக்கவும் நூலாசிரியர்களை ஊக்கப்படுத்தவும் நல் வாய்ப்பாக விற்பனை அரங்கத்தை மாநாடு அமைக்கிறது. எனவே, பங்கேற்கும் ஆர்வமுள்ளவர்கள் வரும் ஆனி 5 /  சூன் 20 ஆம் நாளுக்குள் மாநாட்டு முகவரிக்குத் தங்கள் வெளியீட்டக அல்லது பதிப்பக முகவரியையும் பேசி எண்களையும் இடம் பெறும் புத்தகப்பட்டியல்களையும் தமிழில் அளிக்குமாறு வேண்டுப்படுகிறார்கள். நூல்களை ஆனி 20/  சூலை 5 அன்று மாநாட்டு வளாகத்தில் கொண்டு சேர்க்கத் தெரிவிக்கப்படுகிறார்கள். தங்கள் பதிப்பக அல்லது நூல் விவரப் பதாகையையும் தமிழில் அளிக்க வேண்டப்படுகிறார்கள்.

3. கலை நிகழ்ச்சிகள்

மாநாட்டை முன்னிட்டு இருநாள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், மயிலாட்டம், வில்லுப்பாட்டு, தப்பாட்டம், தேவராட்டம், பொம்மலாட்டம், தோற்பாவைக்கூத்து, தெருக்கூத்து, கணியான் கூத்து, களியலாட்டம், கைச்சிலம்பாட்டம், கட்டைக் காலாட்டம், குறவன் குறத்தி யாட்டம், கருப்புச்சாமியாட்டம் முதலிய நாட்டுப்புறக்கலைகள், தமிழிசை, பரத நாட்டியம், மூலம் தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு, மூவேந்தர்கள் சிறப்பு, வள்ளல்கள் சிறப்பு முதலிய தமிழைச் சிறப்பிக்கும் கலைநிகழ்ச்சிகளை அளிக்க முன்வருவோர் வரலாம். கலைக்குழுவின் பெயர், குழுத்தலைவர் பெயர், பங்கேற்போர் எண்ணிக்கையும் பெயர்களும், முகவரி, பேசி எண்,  பிற தொடர்பு விவரம் ஆகியவற்றை வரும் வைகாசி 16 / மே 30 ஆம் நாளுக்குள் மாநாட்டு முகவரிக்குத் தெரிவிக்க வேண் டியுள்ளனர். உலகத்தமிழாராய்ச்சியாளர்கள் முன்னிலையில் தத்தம் கலைத்திறமையையும் தமிழின் சிறப்பையும் வெளிப்படுத்த விரும்புபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பங்கேற்புக் கலைஞர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

நல்வாய்ப்புகளை அனைவர் பயன்படுத்திக் கொள்ள  வேண்டுகிறோம்!