மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் உரூபாய்க்கான பரிசுப் போட்டிகள்
மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் உரூபாய்க்கான பரிசுப் போட்டிகள்
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணப் போட்டிகள்:
கம்பராமயண ஒப்பித்தல் போட்டி –1
பேரா. மு.பழனியப்பன் தன் தந்தையார் பெயரால் நிறுவியுள்ள தமிழாகரர் பழ. முத்தப்பனார் பரிசு.
பிரிவு -9,10,11,12 மாணாக்க மாணக்கியர்களுக்கானது.
நாள்- தை 15, 2048 / 28.1.2017
நேரம் 0 9.30 மணி
இடம்- கிருட்டிணா கல்யாணமண்டபம், கல்லுக்கட்டி மேற்கு, காரைக்குடி
எதிர்பார்க்கும் தகுதிகள்:
உச்சரிப்பு, ஒலிநயம், மெய்ப்பாடு இவற்றோடு பொருள் அறிந்து வருதலும் சிறப்பான தேர்ச்சிக்கு வழி வகுக்கும்.
முதற்பரிசு- உரூ 1000
ஊக்கப்பரிசுகள் – பங்கேற்கும் ஐவரில் ஒருவருக்கு என ஒவ்வொருவருக்கும், உரூ 250
போட்டிக்குரிய பகுதி:
அயோத்தியா காண்டம் பள்ளிப்படை படலத்தில் 22 பாடல்கள்
‘மைஅறு மனத்து’ என்று தொடங்கும் பாடல் ‘முதல் தூய வாசகம் சொன்ன’ என்று தொடங்கும் பாடல் முடிய
கம்பராமாயண ஒப்பித்தல் போட்டி –2
6,7,8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணாக்க மாணக்கியர்களுக்கானது.
முதற்பரிசு உரூ1000
ஊக்கப்பரிசு – போட்டியில் பங்கேற்போரில் ஐவருக்கு ஒருவர் என ஒவ்வொரு வருக்கும் 250 உரூபாய்
மனப்பாடப்பகுதி:
திருஅவதாரப்படலத்தில் 22 பாடல்கள்
‘மாமணி மண்டபம் மன்னி’ என்று தொடங்கும் பாடல் முதல் ‘எந்தை நின் அருளினால்’ என்று தொடங்கும் பாடல் வரை.
குறிப்பு:
- பள்ளியில் இருந்து ஒவ்வொரு பிரிவிற்கும் இருவர் மட்டுமே உரிய இசைவுடன் கலந்து கொள்ள வேண்டும்.
- மனப்பாடப்பகுதி வேண்டுவோர் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்க.
கம்பராமாயணப் பேச்சுப் போட்டிகள்
தமிழக அனைத்துக் கலை அறிவியல், பொறியியல், தொழில் நுட்பக் கல்வியியல்
கல்லூரிகளுக்கான பேச்சுப் போட்டி – 2016-17
போட்டி நடக்கும் நாள் : தை 15, 2048 / 28-1-2017
இடம் – காரைக்குடி கிருட்டிணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி மேற்கு
போட்டி -1 கம்பராமாயணப் பேச்சுப் போட்டி
காலை 10 மணி முதல்
முதற்பரிசு உரூ 3500
பேராசிரியர் தி. இராச கோபாலன் நிறுவியுள்ள அவரின் தாயார் வேம்பு அம்மாள் நினைவுப் பரிசு
இரண்டாம் பரிசு உரூ 1000
திரு, ப. மெய்யப்பன், திருமதி உமா நிறுவியுள்ள அவர்தம் புதல்வர் கதிர் பழனியப்பன் நினைவுப் பரிசு
ஊக்கப்பரிசு உரூ 500 இருவருக்கு
தலைப்பு:
1 கம்பனில் மனித நேயம்
2.கம்பனில் மனித உணர்வுகள்
3.கம்பனில் மனித ஆற்றல்
இம்மூன்றில் ஒன்று அறிவிக்கப்பெறும். அது குறித்து 10 நிமிடங்கள் பேசப்படும்
போட்டிக்கு வந்து செல்லப் பயணச் செலவு ஏதும் தரப்படாது.
சென்ற ஆண்டில் முதற்பரிசு வாங்கியோர் அப்போட்டியில் இவ்வாண்டு கலந்து கொள்ள இயலாது.
திருக்குறள் பேச்சுப் போட்டி
முதற்பரிசு உரூ 3500
பேராசிரியர் சரசுவதி இராமநாதன் அவர்கள் நிறுவியுள்ள அவர்தம் கணவர் புலவர் க.வே. இராமநாதனார் நினைவுப் பரிசு
இரண்டாம் பரிசு உரூ 1000
திரு, ப. மெய்யப்பன், திருமதி உமா நிறுவியுள்ள அவர்தம் புதல்வர் கதிர் பழனியப்பன் நினைவுப் பரிசு
ஊக்கப்பரிசு உரூ 500 இருவருக்கு
தலைப்புகள்:
- கல்வி , கேள்வி
- அறிவு – பணிவு
- ஆண்மை- பேராண்மை
இம்மூன்றில் ஒன்று அறிவிக்கப்பெறும். அது குறித்து 10 நிமிடங்கள் பேசப்படும்
போட்டிக்கு வந்து செல்ல பயணச் செலவு ஏதும் தரப்படாது.
சென்ற ஆண்டில் முதற்பரிசு வாங்கியோர் அப்போட்டியில் இவ்வாண்டு கலந்து கொள்ள இயலாது.
மாணவர்கள் கலந்து கொள்ளுங்கள்
பார்வையாளராக நீங்கள் வாருங்கள்
தமிழறிஞர்கள் நடுவர்களாக வாருங்கள்
அனைவரையும் அழைக்கிறோம்
வருவதற்கு முன்னால் வரும் விவரம் தெரிவித்தால் பிற ஏற்பாடுகள் குறைவின்றிச் செய்ய இயலும்
கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க வாருங்கள்.
கம்பன் வாழ்க!
கம்பன் புகழ் வாழ்க!
கன்னித்தமிழ் வாழ்க!
கம்பன் கழகம்
சாயி 1. ஈ செட்டிநாடு கோபுரம்
5 வள்ளுவர் தெரு, சுப்பிரமணியபுரம் வடக்கு
காரைக்குடி 630002
பிற தொடர்பிற்கு
9445022137
மு.பழனியப்பன்/ Palaniappan M
Leave a Reply