கருப்பு ஆடி, 32 ஆம் ஆண்டுத் துயர நினைவு, இலண்டன்
83ஆம் ஆண்டு இனப்படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் 10, தவுனிங்கு தெரு(Downing Street) முன்பாகப் பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
1983 ஆம் ஆண்டு சூலை மாதம் 23 ஆம் நாள் இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஒரு மாபெரும் நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வொன்றினை, எதிர்வரும் ஆடி 07, 2046 / சூலை மாதம் 23 ஆம் நாள் பிற்பகல் 4 மணியிலிருந்து 8 மணிவரை, பிரித்தானியத்தலைமையமைச்சரின் அலுவல்முறை வதிவிடமான 10, தவுனிங்கு தெரு(Downing Street) முன்பாகப் பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
எமது மக்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களைப் பன்னாடுகளின் கவனத்திற்கு நாம் ஓயாது தொடர்ந்து கொண்டு சென்று கொண்டிருத்தல் காலத்தின் கட்டாயம். இதன் தொடர்பில் ஏற்கெனவே பிரித்தானியத் தமிழர் பேரவை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது .
எங்கள் மக்களின் வலிகளைப் பதிவு செய்யும் இந்நிகழ்வில் அனைத்துப் புலம் பெயர் வாழ் உறவுகளையும் கலந்து கொண்டு தம் உணர்வுகளை வெளிப்படுத்துமாறு பிரித்தானியத் தமிழர் பேரவை வேண்டிக் கொள்கிறது.
Leave a Reply