பன்னாட்டு உசாவலுக்கான நீதிப் பேரணி, தொரண்டோ
தமிழர் தேசத்தை அங்கீகரி!
இனப்படுகொலையாளிகளைத் தண்டி!
அனைத்துநாட்டு விசாரணையை வலியுறுத்தி மாபெரும் போரணி
தமிழீழத் தாயகம், தமிழகம், புலம் பெயர்ந்து வாழும் தேசங்கள் ஆகிய அனைத்து இடங்களைச் சேர்ந்த தமிழ்மக்களும் ஒன்றாக ஓரணியில் ஒருமித்த குரலில் அமெரிக்கா முதலான அனைத்து நாடுகள், தமிழ் மக்கள் மீதுதிணிக்கத் திட்டமிட்டிருக்கும் உள்ளக விசாரணையைக் கண்டித்து அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி இனப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணை மூலம் நீதி வேண்டி இந்த மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.
இடம்: 360, பல்கலைக்கழ நிழற்சாலை,
அமெரிக்கத் தூதரகம் முன்பு (360 University Avenue (In front of U.S Consulate):
நாள்: புரட்டாசி 04, 2046 / செப்.21 – திங்கள் கிழமை
நேரம்: மாலை 3 மணியிலிருந்து 7 மணி வரை
இந்த நூற்றாண்டின் மிகக் கொடிய இனப்படுகொலை அரங்கேறி 6 ஆண்டுகளாகியும் எம் ஈழ மண்ணில் நடந்தது ஒரு கொடிய இனப்படுகொலை எனச் சொல்ல முன்வராத அனதை்துத்தேசத்திடம் நீதி வேண்டி உலகத் தமிழினம் உலகெங்கும் இருந்தும் குரல் கொடுத்துப் போராடி வரும் காலக்கட்டத்தில் ஐ. நா. வின் முன்பாக எதிர்வரும் புரட்டாசி 04 / செப்டம்பர் மாதம் 21 ஆம் நாள் ஐரோப்பா வாழ் தமிழ் உறவுகளும் உலகின் பல பாகங்களில் இருக்கும் உறவுகளும் செனீவாவில் ஐ. நா. முன்றலில் முருகதாசன் திடல் நோக்கிப் பேரணியாக அணி திரள இருக்கும் எழுச்சிக் நிகழ்வுக்கு வலு சேர்க்கும் முகமாக கனடா வாழ் தமிழ் மக்களும் சம காலத்தில் அதே நாளில் தொரொண்டோவில் அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக நீதி வேண்டி மாபெரும் அணியாகத் திரண்டு எழுந்துபோராட உள்ளார்கள்.
இந்தப் பேரணியில் கனடா வாழ் அனைத்துத் தமிழ் உறவுகளும் கனடியத் தமிழர் சமூகம், மாணவர் சமூகமுமாக அணி திரண்டு இணைந்து கொண்டு நீதியை வேண்டிப் போராட அணி திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
மேலதிகத் தொடர்புகளுக்கு:த் கனடியத் தமிழர் தேசிய அவை [NCCT]
தொலை பேசி:416.830.7703 |
மின்னஞ்சல்: info@ncctcanada.ca | முகநூல் @ncctonline
Leave a Reply