miyanmar thamizh chankam01

அன்பார்ந்த தமிழ் உறவுகளே…
வணக்கம்.
மியன்மா-மலேசியா-சிங்கப்பூர் தமிழ் உறவுப்பாலம் மாநாடு (2014)
என்ற தமிழ் உறவுகள் ஒன்று கூடி மொழி, இனம், கல்வி, பண்பாடு போன்ற சிறப்பியல்புகளைப் பரிமாற்றம் செய்யும் மாபெரும் நிகழ்வுகள், மியன்மா நாட்டின் வணிக நகராம் யாங்கோன் நகரில் 2014 சூன் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் சிறப்புடன் நடைபெறும்.

உலகத் தமிழ் உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மலேசியா-சிங்கப்பூர் தவிர மற்ற நாடுகளில் வாழும் தமிழ் உறவுகள் பதிவு செய்ய – தொடர்பு கொள்ள வேண்டுபவர் &

மியன்மா ஒருங்கிணைப்பாளர் : சோலை.தியாகராசன்

மின்வரி: solai.thiyagarajan@gmail.com

அலைபேசி : 00 959 43042105

மலேசியா ஒருங்கிணைப்பாளர்கள்: சோகூர் தமிழர் சங்கப் பொறுப்பாளர்கள்

1.திரு. ந.வேணுகோபால் தலைவர்( 016-7333720 ),

2.திரு. இரா. சேதுபதி துணைத்தலைவர்( 012-70006976 )

3. திரு.இல. வாசுதேவன்– செயலாளர்( 019-7211065 )

4. திரு. சு.இரவிச்சந்திரன் – பொருளாளர் ( 013-7689379 )

5. திரு. கு. முருகன் – செ.உறுப்பினர் ( 012-7156824 )

சிங்கப்பூர் ஒருங்கிணைப்பாளர்கள்:

1.திரு.வை.தேவராசா

மின்வரி: devaraja.v@gmail.com

2.திரு.கந்தசாமி

3.திரு.சிவபாலன்

4.திரு.சிவசாமி

5.திரு.மணிமாறன்

மலேசியா-சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் மேற்கண்ட மலேசியா-சிங்கப்பூர் ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

மாநாட்டு நிகழ்ச்சிகள்:

6-6-2014 இரவு 7மணிமுதல் 10மணிவரை…தொழில் வணிகர்கள் சந்திப்பு –  விருந்தோம்பல்  இந்நிகழ்வில் மியன்மா தொழில்  வணிகர்கள் குறைந்தது நூறு பேரின் விவரநூல் வெளியிடப்பெறும்.

 

தொழில் வணிகர்கள் நட்புறவு-வணிக நோக்கங்கள் வலுப்பெற உதவும் வழிவகைகள் மேம்படுத்தப்பெறும்.

 

7-6-2014 காலை 10.00 மணிமுதல் 5.00 மணிவரை

முதல் நாள் மாநாடு.

இரவு 7.00-10.00 மணி…கலை இரவு விருந்தோம்பல்

 

 

8-6-2014 காலை 10.00 மணிமுதல் 5.00 மணிவரை

இரண்டாம் நாள் மாநாடு.

இரவு 7-10 மணி…கலை இரவு விருந்தோம்பல்

 

 

மாநாட்டில் ஐந்து அமர்வுகள், கலை- பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஒன்றிணைந்து சிறப்பிக்கப்பெறும்.