கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு

மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் எண்மம், மொசில்லா தமிழ்க் குழுமம், உபுண்டு தமிழ்க் குழுமம், தமிழ் அலுவல்தற்சார்பு(libreoffice)  இணை ஏற்பாட்டில் எதிர்வரும் ஆனி 20-21, 2051 / 4 – 5 சூலை 2020 அன்று, தமிழில் உலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்ப மாநாடு” இணையம்வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனிதப்போன்மை(ஆன்டிராய்டு),வெண்ணாந்தை நிரல்(பைதான்), மொசில்லா, இணையப் பாதுகாப்பு, கணிணி மொழியியல், கணிணி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் கணிணி போன்ற தலைப்புகளில் கணிஞர்கள் படைப்பினை வழங்குவர். சில படைப்புகள் பட்டறைகளாக நடத்தப்படும்.

இல்லிருப்பாணையில் இருப்பினும் இயங்கலையில் இணைவோம்.! இணையத்தில் இணைந்து தமிழ்நுட்பம் வளர்ப்போம்.!

மாநாட்டுப் பேராளர் கட்டணம் இலவசம்.

மின் சான்றிதழுக்கு முன் பதியவும் :

https://tinyurl.com/yblt7b2f

மேலதிக விவரங்கள் விரைவில்.