ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1531-1550: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1521-1530 இன் தொடர்ச்சி)
1531. மீயொலி யியல் | Hypersonics |
1532. மீளாமை வெப்ப இயங்கியல் | Irreversible thermodynamics |
1533. மீளிணை இ.கீ.அ. நுட்பியல் | Recombinant DNA technology |
1534. மீள்மை இயங்கியல் | Elastodynamics |
1535. மீனியல் | Ichthyology |
1536. மீன் நோயியல் | Fish pathology |
1537. மீன் பதன நுட்பியல் | Fish processing technology |
1538. மீன் பிடியியல் | Piscatology |
1539. மீன்வளப் பொறியியல் | Fisheries engineering |
1540. மீன்வளர்ப்புப் பொருளியல் | Aquaculture economics |
1541. முக அழகியல் | Kalology |
1542. முகமுடிப் பண்டுவம் | Hypertrichology |
1543. முகிலியல் | Nephology |
1544. முகில் இயற்பியல் | Cloud physics |
1545. முகிழுயிரியியல் | Protistology |
1546. முக்கூற்றுடலியியல் | Trilobitology |
1547. முட நீக்கியல் | Orthopaedics |
1548. முடவியல் | Rheumatology |
1549. முடி நீக்கியல் | Electrology (2) |
1550. முடி யியல் மயிரியல், மயிர்முடிநூல், முடியியல் எனப்படுகின்றது. Trich என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு முடி எனப்பொருள். மயிர் என்பது நல்ல தமிழ்ச்சொல்தான். மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் (திருக்குறள் 969) எனத் திருவள்ளுவரும் பயன்படுத்தி யுள்ளார். இருப்பினும் இச்சொல்லை வசைச்சொல்போல் இப்பொழுது பயன்படுத்தி வருவதாலும் எண்ணிக்கையில் ஓர் எழுத்து குறைவதாலும் சுருக்கமான முடியியல் – trichology என்பது குறிக்கப்பட்டுள்ளது. | Trichology |
(தொடரும்)
Leave a Reply