(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1501 – 1520 இன் தொடர்ச்சி)
1521. மின்னணுப் பொறியியல்Electronics Engineering
1522. மின்னணுவியல்Electronics
1523. மின்னியங்கியல்Electrophysiology
1524. மின்னியல்Electrology (1)
1525. மின்னொளி யியல் Electrooptics
1526. மீ கணக்கியல் Meta – மாறு, மிதப்பு, மீ, உயர் என்னும் பொருள்களில் பயன் படுத்தப்படுகிறது. Meta என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நடுவில், மேல், அப்பால் ஆகும். எனவே, இடத்திற்கேற்ற பொருள் தரும் இணைப்புச் சொல்லாக Meta உள்ளது. மீ என்றால் மேலிடம், உயரம், உயர், வானம், மேன்மை எனப் பொருள்கள்.  ஆதலின், உயர், மேல், எனப் பயன்படுத்தப்படும் இடங்களிலும் மீ என்றே பயன்படுத்தலாம். Metamathematics உயர் ஏரணக் கணக்கியல், கணிதக் கோட்பாட்டியல் எனப் படுகின்றன. கணக்கியலின் உயர் கோட்பாட்டை விளக்கும் துறை. எனவே, மீ கணக்கியல் எனலாம். மீ கணக்கியல் – MetamathematicsMetamathematics
1527. மீ மொழியியல் Metalinguistics – குறிநிலை மொழியியல் எனப்படுகிறது. குறிநிலை என்றால் குறிக்கோள் நிலையா, குறியீட்டு நிலையா என்ற குழப்பம் வருகிறது. முபீன் சாதிகா(Mubeen Sadhika) என்பவர் தன் வலைப்பூவில் குறிநிலை குறித்த தேனியல் சாண்டிலரின் விரிவான கருத்துகளின் மொழி பெயர்ப்பைத் தந்துள்ளார். மீ என்பது பல்பொருள் ஒரு சொல்.  இந்த இடத்தில் மீ மொழியியல் எனக் குறித்து விளக்கத்தில் குறிநிலை குறித்துத் தெரிவிக் கலாம். மீ மொழியியல் – MetalinguisticsMetalinguistics
1528. மீகாந்தத் தூண்டல் இயற்பியல்Megagauss physics
1529. மீட்பு வளைசலியல்RestorationEcology
1530. மீ நிகழ்வு உளவியல்   Parapsychology(1) என்பதை ஆன்மிக உளவியல் (ஆன்மீக உளவியல்), இயல்பு கடந்த உள (ஆன்மீக) இயல் நிகழ்வுகள்  என விளக்குகின்றனர். இதையே மீநிகழ்வு உளவியல் எனக் குறித்துள்ளோம். Parapsychology(3) என்றால் சித்த மருத்துவம் என்றும் கூறுகிறார்கள். காரணம் தெரியவில்லை.      Parapsychology(1)

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000