ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1713-1719 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1712 இன் தொடர்ச்சி) |
713. வானகத் தொல்லியல் | Astroarcheaology |
1714. வானக Astro – வான், விண், அசுரோ, சோதிடம், உடு எனக் கூறப்படுகின்றன. அசுரோ என்பது ஒலிபெயர்ப்புச் சொல். சோதிடம் தமிழ்ச்சொல்லல்ல. உடு என்பதற்கு விண்மீன் என்பது பொருள். எனவே, இந்த இடத்தில் உடு என்பது பயன்படுத்தப்பட வேண்டா. வானின் அகத்தே உள்ள பொருள்கள் என்னும் பொருளில் வானகம் எனலாம். முன்னொட்டுச் சொல்லிற்கு வானக – Astro என்று குறிக்கலாம். | Astro |
1715. வானிலையியல் Neteorology – வானியல், வானிலையியல் எனச் சில அகராதிகளில் குறிக்கப் பெற்றுள்ளன. Meteorology என்னும் சொல் எழுத்துப் பிழையாக Neteorology என்று ஒன்றில் இடம் பெற்று அதுவே பிற அகராதிகளிலும் பதிவாகி யுள்ளது. வானம் என்பதைப் புவிக்கு வெளியிலுள்ள பகுதி எனக் கருதிப், புவிவெளியியல் என்று சொல்வோரும் உள்ளனர். வானிலுள்ள கோள்கள், உலவிகள், உழலிகள் முதலான வான்பொருள்கள் குறித்தவற்றை வானியல் எனலாம். வானில் அமையும் மழை, வெயில், தட்ப வெப்பம் முதலான நிலைகளைப்பற்றிய அறிவியல் வானிலையியல் என்பது பொருத்தமாக இருக்கும். இதனைக் காலநிலை யியல் என்கின்றனர் சிலர். இவ்வாறு கூறுவது Climatology என்ற எண்ணத்தை விளைவித்துக் குழப்பத்தை ஏற்படுத்தும். வானிலையால் அமையும் காலநிலைச் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு இது. எனவே, காலஅமைப்பியல் எனலாம் எனக் கருதிப் பார்த்தோம். இதைவிட நேரடியாக வானிலையியல் என்பதே ஏற்றதாக இருக்கும் என்பதால் வானிலையியல் எனக் குறித்துள்ளோம். | Meteorology |
1716. வானக இயற்பியல் | Astrophysics |
1717 வானிலை ஒளியியல் | Meteorological Optics |
1718. வானூர்தி வித்தை aerial-acrobatics என்னும் இரு சொற்களின் இரு பகுதி ஒட்டுச்சொல். | Aerobatics |
1719. வானூர்திப் பொறியியல் | Aeronautical Engineering +++++++++ |
(தொடரும்)
Leave a Reply