(‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ 1/4 தொடர்ச்சி)

முனைவர் மு.மோகனராசின்

‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ –

நூலாய்வு 

2/4

4.3.0.0.கன்பூசியசின் (இ)லூன்யூவும் திருவள்ளுவரது திருக்குறளும்:

4.3.1.0. கன்பூசியசின் (இ)லூன்–யூ:

            சீனாவின் மறை நூலகிய (இ)லூன் யூ, உரை நடையில் அமைந்த நூல். இதில் 20 இயல்கள், 499 முதுமொழிகள் உள்ளன.

            இவற்றுள் 424 முதுமொழிகள் கன்பூசியசு உரைத்தவை; 32 முதுமொழிகள் கன்பூசியசு பற்றியவை; 43 முதுமொழிகள் பிறர் உரைத்தவை.   

4.3.2.0.திருவள்ளுவரது திருக்குறள்:

   [பரிமேலழகர் வைப்பு முறை] 

            3 பால்கள். அவை:

1.அறத்துப்பால், 2.பொருட்பால். 3.காமத்துப்பால்.

9 இயல்கள். அவை:

1.அறத்துப்பால்.

4 இயல்கள். அவை:

1.பாயிரம், 2.இல்லற இயல், 3.துறவியல் இயல், 4. ஊழ் இயல்.

2.பொருட்பால்

1.அரசியல், 2. அங்க இயல், 3.ஒழிபு இயல்

3.காமத்துப்பால்

1.களவு இயல், 2.கற்பு இயல்..

133 அதிகாரங்கள், 1330 குறட் பாக்கள்.1.

5,0.0.0. நூல் ஒப்பாய்வின் எல்லை:

            நூலாசிரியர் முனைவர்கு.மோகனராசு அவர்கள், இந்நூலுக்கு ஒப்பாய்வு எல்லையை வரையறுத்துள்ளார். அது:

         “கன்பூசியசு கூறிய கருத்துகளை அவரது மாணவர்கள் தொகுத்துள்ளனர். இக்கருத்துகளைப் பெரும்பகுதியாகக் கொண்டு விளங்கும் உலகப் பேரிலக்கியங்களுள் ஒன்றாக ஒளிர்வது (இ)லூன் யூ [Lun Yu] என்னும் நூலாகும்.

           இந்நூலில் காணும் கன்பூசியசுவின் கல்வி தொடர்பான சிந்தனைகளே, உலகப் பொதுமறை தந்த வள்ளுவரின் கல்வி தொடர்பான சிந்தனைகளோடு ஒப்பிட்டு ஆராயப்படுகின்றன.” பக்.11].

5.1.0.0.கன்பூசியசின் நூல் தரவு எல்லை: 4:

            இந்த ஒப்பாய்வில் கொள்ளப்பட்ட கன்பூசியசுவின்  நூல்க ளை நூலாசிரியர் கீழ்க்காணும்படி நுவலுகின்றார்.

         “இந்த ஒப்பாய்வில், (இ)லூன் யூவின் சீனமொழி மூலம் [Text] ஆய்வுக்குக் கொள்ளப்படவில்லை. சேம்சு (இ)லெக் கி [James LEgge] எழுதிய கன்பூசியசுவின் மெய்ப்பொ ருளியல் [The Philosophy of Confucius], (இ)யூதாங்கு [Yutang] தொகுத்து வழங்கிய சீனாவின் பேரறிவும் இந்தியாவின் பேரறிவும் [The Wisdom of Chins and India]  தக்கன்   கிரீன் இலெசு [Ducan Greeless] அவர்களின் சீன மறை நூல் [The Gospel of Chiin], விங்கு  திசிட்டு [Wing Tsit Chan] அவர்களின் சீன மெய்ப்பொருளியல் முதல் நூல் [A Source Book in Chinese], ஆகிய நூல்களே அடிப்படை நூல்களாகக் கொள்ளப்பட்டுள்ளன.” [பக்.12-13].   

5.2.0.0.திருவள்ளுவரின் நூல் தரவு எல்லை:

            திருவள்ளுவரின் நூல் தரவுகளின் எல்லையாக  நூலாசிரி யர் கொண்டது, நூல் தரவுகள் திரட்டல் பகுதியில் கொடுக்கப் பட்டுள்ளது.

6,0.0.0.தரவுகள் திரட்டிய முறைமை:

இந்நூலாசிரியர் முனைவர்கு.மோகனராசு அவர்கள் திரட்டிய தரவுகள், அவரது தரவுத் திரட்டல் ஆய்வுத் திறனை  அறிவிக்கின் றன. நூலாசிரியர் திரட்டிய தரவுகளை 2 வகைகளுள் அமைக்கலாம். அவை:

6.1.0.0.கன்பூசியசு கண்ட கல்வித் தொடர்புத் தரவுகள்

6.2.0.0.திருவள்ளுவர் கண்ட கல்வித் தொடர்புத் தரவுகள்

6.1.0.0.கன்பூசியசு கண்ட கல்வித் தொடர்புத் தரவுகள்:

கன்பூசியசு கண்ட கல்வித் தொடர்புத் தரவுகள் 4 வகைகளுள் அமைக்கலாம். அவை:

6.1.1.0.கன்பூசியசுவின் கருத்தியல் உள்ள (இ)லூன் யூ என்னும்

             நூலிருந்து திரட்டப்பட்டவை – 104

6.1.2.0.கன்பூசியசுவின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள் – 5

6.1.3.0.கன்பூசியசு பற்றிய மரபுக் கதை – 1

6.1.4.0.கன்பூசியசின் மாணவர்கள் பற்றியன – 16

6.2.0.0.திருவள்ளுவர் கண்ட கல்வித் தொடர்புத் தரவுகள்:

திருவள்ளுவர் கண்ட கல்வித் தொடர்புத் தரவுகளும் 9 வகைகளுள் அமைக்கலாம். அவை:

1.2.1.0.குறட் சொற்கள் – 5

1.2.2.0.குறட் தொடர்கள் – 10

1.2.3.0.குறட் பாக்கள் –  69

1.2.4.0.குறட் கருத்துகள்- அவற்றிற்கு உரிய எண்களை

             அடைப்புகளுள்  அடைக்கப்பட்டவை – 29

            1.2.5.0.திருக்குறள் அதிகாரத் தலைப்புகள் -13

            1.2.6.0.துணைநூற் தரவுகள் – 12 

            1.2.7.0.உரையாசிரியர்கள் பெயர்கள் – 3

            1.2.8.0.இலக்கியப் புறச்சான்றுகள் – 6

            1.2.9.0.சான்றோர்களின் மேற்கோள்கள் – 4

7.0.0.0.வகைதொகை செய்த முறைமை:

            திரட்டிய தரவுகளைத் தெளிவுற வகைதொகை செய்வதுதான் ஓர் ஆய்ஞரின் தோய்திறனை அளவிட்டுக் காட்டும்.  தரவுகள் திரட்டல் முறைமை என்னும் பகுதியில் நூல் ஒப்பாய்ஞர் முனைவர் கு.மோகனராசு அவர்கள் வழங்கிய  கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி தொடர்பான தரவுகளின் தொகை தரப்பட்டுள்ளது.

ஒப்பாய்வைத் தெளிவுறச் செய்யும் வகையில்,

7.2.1.0.கன்பூசியசும் திருவள்ளுவரும்

7.2.2.0.கல்வியின் நோக்ககள்

7.2.3.0.கற்கும் எல்லை

7.2.4.0.எல்லார்க்கும் கல்வி

7.2.5.0.ஆசிரியர்

7.2.6.0.ஆசிரியர் – மாணவர் தொடர்பு

            7.2.7.0.மாணவர்

7.2.8.0.கற்பதற்கு உரியன

7.2.9.0.கற்பிக்கும் முறைமை

7.2.10.க.ற்கும் முறைமை

7.2.11.0.கல்வியின் பயன்கள்

7.2.12.0.நிறைவுரை

ஆகிய 12 தலைப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வித் தரவுகளை எல்லாம் மேற் கண்ட 12 தலைப்புகளுக்குள்  அடங்கும் வகையில் வகைமை செய் யப்பட்டுள்ளன.

இவ்வகைப்பாடு ஒப்பாய்வு சிறக்கும் வகையில் செப்பமுற அமைந்துள்ளது. இஃது ஒப்பாய்ஞர்கள் ஏற்றுப் போற்றிப் பின் பற்றும் வகைமையில் ஆற்றுப்படுத்துகின்றது.      

(தொடரும்)

பேராசிரியர் வெ.அரங்கராசன்

(முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்

கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி

கோவிற்பட்டி — 628 502 )

கைப்பேசி: 9840947998

   மின்னஞ்சல்: arangarasan48@gmail.com