(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  876 -894  இன் தொடர்ச்சி)
895. தொல்லியல்Archaeology
896. தொழிலக உளவியல்Industrial Psychology
897. தொழிலக நுண்ணுயிரி யியல்Industrial Microbiology
898. தொழிலக மின்னணுவியல்Industrial Electronics
899. தொழிலக  வானிலை யியல்Industrial Meteorology
900. தொழிலக வேதி யியல்Industrial Chemistry
901. தொழிலகக் குமுகவியல்           Industrial Sociology
902. தொழிலகப் பொருளியல்Industrial Economics
903. தொழிலகப் பொறி யியல்Industrial Engineering
904. தொழில்முனைவோரியல்   கெளவை என்றால் வணிகம் எனப் பொருள். வணிகத்தில் ஈடுபடுநர் குறித்த இயல் என்பதால் கெளவையியல் என்றும் சொல்லலாம். ஆனால் பழக்கத்திற்கு வரவேண்டும்.Entreprenology
905. தொழு நோயியல்Leprology
906. தொற்று நோயியல்Epidemiology
907. தொன்மவியல்Mythology
908. தோட்டுயிரி யியல்Astacology
909. தோலியல்   dérma என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்குத் தோல் என்று பொருள். தோல் குறித்தும் தோல் நோய் குறித்தும் ஆராயும் துறை. எனவே, தோலியல் என்றும் தோல் நோயியல் என்றும் சொல்லப்படுகின்றது. சுருக்கமான தோலியல் என்பதையே பொதுவாகக் கையாளலாம்.Dermatology
910. தோல் கூற்றியல்Dematoglyphics
911. தோற்றப்பாட்டியல்   phenomenon என்னும் பண்டைய கிரேக்கச் சொல்லின் பொருள் பார்க்கத் தோன்றும் பொருள்.   புறஞ்சாரா இயல் (Phenomenology2), நிகழ்வியல் (Phenomenology3), நனவு இயல் (Phenomenology4), தொடர்பிலி யியல், தோற்றக் கொள்கை யியல்,  எனவும் வெவ்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றனPhenomenology (1)
912. தோற்றரவு முரணியல் haunting, ontology ஆகிய இரு சொற்களின் பகுதி இணைப்புச் சொல் Hauntology.Hauntology
913. நக நோயியல் Unguis என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நகம். இச்சொல்லிலிருந்து உருவானது Onycho.                                                                                                                            Onychopathology

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000