(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  868 –  875 இன் தொடர்ச்சி)
 

876. தையல் நுட்பியல்

Stitch technology         

877. தொகுப்பு வானிலையியல்

Synoptic Meteorology(1)

878. தொடரியல்

Phraseology

879. தொடரி யியல்

Latin இலத்தீன் சொற்களான ferrum, equus  என்பனவற்றிற்கு முறையே இரும்பு, குதிரை என்று பெயர். இரும்புக்குதிரை என்பது தொடர்வண்டியைக், குறிப்பாக அதன் பொறியைக்குறிக்கிறது. தொடர்வண்டி என்பதன் இன்றைய வடிவமே தொடரி என்பது.

Ferroequinology

880. தொடர்கொலை யியல்

இலண்டனில் வெண்கோயில் (Whitechapel) நகரில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தொடர் கொலையாளி இயாக்கு என்பவன் குறித்த ஆய்வு. இதன் மூலம் தொடர் கொலைகளை ஆராய்வதால் தொடர் கொலையியல் எனப்படுகிறது.

Ripperology

881. தொல் புவியியல்

Archeogeology

882. தொல்லினவியல்

Ethnoarcheology

883. தொற்றியல்

கொள்ளைநோய்கள் குறித்து ஆராயும்  கொள்ளைநோயியல். இந்நோய்கள் தொற்றுமூலம் பரவுவன. ஆதலின் தொற்று நோயியல் எனப்படுகிறது.

Phorology / Endemiology /  Epidemiology

884. தொகு மின்னணுவியல்

Integrated Electronics

885. தொடக்கநிலைக் கணிதம்

Elementary Mathematics

886. தொடர்ம இயற்பியல்

Continuum physics

887. தொடர்ம விசையியல்

Continuum mechanics

888. தொண்டை இயல்

pharynx என்னும் இலத்தீன் சொல்லிற்கும் phárunx என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கும் தொண்டை எனப் பொருள்.

Pharyngology

889. தொனி யியல்

Tonology

890. தொன்மப் புவியியல்

Geomythology

891. தோற்பதவியல்

Nassology

892. தொலைநிலநடுக்கவியல்

Telesismology/ Teleseismology

893. தொல்  கால நிரலியல்

 Archeological Chronology

894. தொல்விலங்கியல்

Archeozoology, Archaeozoology என்றும் சொல்லப் படுகிறது. பழங்காலத்தில் மனிதர்களுக்கும் விலங்கு களுக்கும் இருந்த உறவு முறையைக் கூறுவது. விலங்கு எச்சவியல் என்று சொல்லத் தக்கது. எனினும் சொல் சீர்மை கருதித்

 தொல் விலங்கியல் – Archeozoology/Archaeozoology எனலாம்.

Archaeozoology / Archeozoology / Zooarchaeology

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000