(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  895 – 913  இன் தொடர்ச்சி)

 

914. நகரக மானிடவியல்  Urban Anthropology
915. நகரகப் பொறியியல்Urban Engineering
916. நகரக் குமுகவியல்Urban sociology
917. நகர  வளைசலியல்Urban Ecology
918. நகரப் புவியியல்Urban geology
919. நகராட்சிப் பொறியியல்Municipal Engineering
920. நகையியல்   நகை என்பது இங்கே நகைச்சுவையைக் குறிக்கிறது.Humorology
921. நஞ்சியல்   நச்சூட்டவியல், விடவியல், நச்சாய்வியல், நச்சியல், நச்சுயியல், நச்சுவியல், நச்சூட்டாய்வு நூல், நஞ்சியல், நச்சூட்டவியல் எனப் பலவாறாகக் கூறப்படுகின்றன. Virus நச்சு எனச்சிலர் நேர் பொருளில் தவறாகக் கூறுகின்றனர். இதனால், Virology –  நச்சியியல் என்றும் குறிப்பிடுகின்றனர். எனவே, பொருள் குழப்பம் ஏற்படலாம். எனவே, இதனைச் சுருக்கமான நஞ்சியல் –Toxicology என்றே குறிக்கலாம்.        Toxicology
922. நடத்தை உயிரியல்Behavioral Biology
923. நடத்தை நச்சியல்Behavioural Toxicology
924. நடத்தை மரபியல்Behaviour Genetics
925. நடத்தை வளைசலியல்Behavioural Ecology
926. நடத்தையியல்   Praxeology உற்பத்தி உறவியல் ; Praxeology / Thymology- நடத்தையியல்; Ethology – நடத்தையியல் / விலங்கின நடத்தையியல்  எனப் படுகின்றன. Prâxis என்றால் பழங் கிரேக்கத்தில் நடத்தை எனப் பொருள். Ēthologia என்னும் இலத்தீன் சொல்லிற்கு மனித, விலங்கின நடத்தை எனப் பொருள். Thymology என்பது மனித நடத்தையின் முன் பின் கூறுகள், விளைவுகள் பற்றியது. என்றாலும் இதையும் நடத்தை யியல் என்றே கூறுகின்றனர். எனவே, நடத்தையியல் Praxeology/Ethology/Thymology எனலாம். காண்க: Praxeology (2) –  புறமண இனஉறுப்பியல்Praxeology(1) / Thymology / Ethology
927. நடனவியல்   khoreía என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் நாட்டியம்/ நடனம்.              Choreology

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000