(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1062 – 1080 இன் தொடர்ச்சி)

 

1081. நோய்மியற்ற விலங்கியல்

Gnotobiology

1082.நோய்வகை யியல்

nósos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நோய். இங்கே நோய்வகைகைள ஆராய்வதைக் குறிக்கிறது.

Nosology

1083 நோவா கதையியல்

ஆபிரகாமிய சமயங்களின் (Abrahamic religions) நம்பிக்கையின்படி, நோவா (Noah) என்பவர் ஊழிவெள்ளம் வருவதற்கு முன் இருந்த பத்தாவதும் இறுதிப் பெருந் தந்தையரும் ஆவார். நோவா என்னும் பெயருக்கு எபிரேயத்தில் ‘ஆறுதல்’ என்பது பொருள். (விக்கிபீடியா)

நோவாவின் அறுநூறாம் அகவையில், இவ்வுலகம் சீர்கெட்டிருந்ததால் கடவுள் இவரைத்தவிர மற்றவர்களை ஊழி வெள்ளத்தால் அழிக்க முடிவு செய்து, நோவாவை ஒரு பேழை செய்யப் பணித்தார். அப்பேழையின் வழியாகக் கடவுள் நோவாவைக் காப்பாற்றினார். வெள்ளப் பெருக்குக்குப் பின்னர் நோவா முந்நூற்றைம்பது ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது கதை. அஃதாவது,  நோவா மொத்தம் தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார் என விவிலியம் கூறுகின்றது. இது கற்பனைக் கதை என்றால் சமயவாதிகள் சினம் கொள்வர். முதலில் பேழை வடிவிலான கப்பல் பற்றியது என்னும் பொருளில் பேழைக்கப்பலியல் எனக் குறித்திருந்தேன். எனினும் நோவாபற்றிய கதை ஆராய்ச்சி என்பதால் நோவா(வின்) கதையியல் என்று குறித்துள்ளேன்.

Arkeology

1084.நோவியல்

Algology (1)

1085.  பகவு இயற்பியல்

Quantum physics

1086. பகவு ஒலியியல்

Quantum acoustics

1087. பகவு ஒளியியல்

Quantum optics

1088. பகவு சாரா விசையியல்           

Nonquantum mechanic

1089. பகவு நிற இயங்கியல்

Quantum chromodynamics

1090. பகவு நீர்ம இயங்கியல்

Quantum hydrodynamics

1091. பகவு மின்னணுவியல்

Quantum electronics

1092. பகவு மின்னியங்கியல்

Quantum electrodynamics

1093. பகவு விசையியல்    

Quantum Mechanics

1094. பகவுக் கனிமவியல் 

Quantum Mineralogy

1095. பகவுப் புள்ளியியல்

Quantum Statistics

1096. பகுதிவாரி நேரியல் திணையியல்

Piecewise linear topology

1097. பகுப்பாய்வு உளவியல்

Analytic psychology

1098. பகுப்பாய்வு விசையியல்

Analytical mechanics

1099. பகுமுறைத் தொற்றியல்

Analytical epidemiology

1100. பங்கேற்பு ஆராய்ச்சி வயணஇயல்(ப.ஆ.வ.)

Participatory research methodology (PRM)

1101. பசுமை அரசியல்

Green Politics

1102. பசுமைப் பொருளியல்

Green Economics

1103. பஞ்சுயிரியியல்

Spongiology

1104. பட எழுத்தியல்

Hieroglyphology

1105. படிக இயங்கியல்

Crystal Dynamics

1106. படிக ஒளியியல்

Crystal Optics

(தொடரும்) 

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000