(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1044 – 1061  இன் தொடர்ச்சி)

1062. நேர்நிலை  ஒப்பமைவியல்

Simplical homology

1063. நேர்ம இனமேம்பாட்டியல்

Positive Eugenics

1064. நொதி நுட்பியல்

Enzyme technology /  Fermentation technology

1065. நொதிப் பொறியியல்

Enzyme Engineering

1066. நொதிவினையியல்

Enzyme kinetics

1067. நொதி யியல்

நொதித்தலியல், நொதிப்பியல், நொதிப்பியியல்; நொதியியல், நொதியச் சக்தியியல், நுரைக்கச்செய்தல் சாசுத்திரம், ஊக்கிப்புரதவியல் எனப் பலவாறாகக் கூறப்படுகின்றன. சுருக்கமான நொதியியல் – Zymology / Enzymology என்பது இங்கே ஏற்கப்பட்டுள்ளது. Fernent  என்றால் நொதிப்பு அல்லது புளிப்பம் எனப்பொருள். எனவே, Fermentology என்பதும் நொதியியல் எனப்படுகிறது.

Zymology / Enzymology /  Fermentology

1068. நோயறி புள்ளியியல்           

காண்க: நோயறிதலியல்- Diagnostics

Diagnostic statistics

1069. நோயறிதலியல்

diagnosis என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கும் பிரெஞ்சுச் சொல்லிற்கும் நோயியல்பு எனப் பொருள். நோயியல்பை அறியும் இயல் நோயறிதலியல்.

Diagnostics

1070. நோயியல் 

Pathology

1071. நோய்  உடம்பியியல்

Patho Physiology

1072. நோய்க்காரண இயல்

பழங்கிரேக்கத்தில் nosos = நோய், + aitia = காரணம்

Nosetiology

1073. நோய்க் குறியியல்

Symptomology/ Symptomatology

1074. நோய்சார் பொருளியல்

Economics of disease

1075. நோய்த் தொற்றியல்

Disease epidemiology /  Infectiology

1076. நோய்த் தீர்வியல்

ákos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் தீர்வு/ மருந்து.

Acology

1077. நோய் நீக்கியல்

Aceology 

1078. நோய்மி எதிர்ப்பியல்

Opsonology

1079. நோய்ம மரபியல்

Bacterial genetics

1080. நோய்ம யியல்

பழங்கிரேக்கத்தில் bacteria என்றால் குச்சி எனப் பொருள். குச்சி வடிவத்தில் உள்ள இதனைக் குச்சியம் என்கின்றனர். நுண்ணிய அளவில் உள்ளதால் நுண்மி என்றும் நுண்ணிய உயிரி என்றும் சொல்வோர் உள்ளனர்.

இதற்கிணங்க நுண்மியியல் எனலாம். நோய்மிக்குக் காரணமான இதனை நோய்மம் எனக் குறிப்பிட்டு நோய்ம யியல் என்றும் சொல்லலாம்.

Bacteriology

(தொடரும்

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000