(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1172 – 1189   இன் தொடர்ச்சி)

1190. பருமப் பாய்வியல்

Bulk rheology

1191. பரும வளர்ச்சி இயக்க இயல்

Bulk growth kinetics

1192. பலியர் இயல்

Victim – துன்புறுத்தப்பட்டவர், பலி,பலியாள், பலியுயிர், பாதிக்கப்பட்டவர், பாதிப்பிற்குள்ளானவர், பாதிப்புறுநர் எனப் பொருள்கள்.

Victimology–பாதிப்புறுநர் தொடர்பான குற்றவியல், பலியாகுனரியல், பலியாள் இயல் எனப்படுகின்றது. இவற்றுள் பலியாகுனரியல் என்பது பலியாகுநரியல் எனக் குறிக்கப் பெற வேண்டும்.

பலியாகுநர் என்பதன் சுருக்கமாகப் பலியர் எனப்பயன்படுத்திப்

பலியரியல் Victimology எனத் தரப்பட்டுள்ளது.

Victimology

1193. பலுக்கலியல்

உச்சரிப்பொலியியல், ஒலி பிறப்பியல் என இரு வகை யாகக் குறிப்பிடு கின்றனர்.

ஒற்றைச் சொல்லில் பலுக்கலியல் எனலாம்.  மூலச்சொல்லில் இரு சொற்கள் உள்ளனவே என எண்ணுபவர்கள், உச்சரிப்பொலிப்பியல் என்று சொல்லிக் கொள்ளட்டும்.

Articulatory phonetics

1194. பல்ஊடு கதிரியல்

Dental radiology

1195. பல்தடயவியல்

Forensic Odontology /  Forensic Dentistry

1196. பல்நுண்புழுவியல்

Polychaetology

1197. பல்நோயியல்

Periodontology

1198. பல்மருத்துவ உயிரி விசை யியல்

Dental biomechanics

1199. பல்மருத்துவ உயிரியற்பியல்

Dental biophysics

1200. பல்லுரை இயல்

Stemmatology / Stemmatics / Stemmology

1201. பல்வேர் இயல்

Endodontics

1202. கனியியல்

Pomology/Carpology  கனி வளர்ப்பியல், கனியியல், பழ இயல், பழவளர்ப்பு நூல் எனக் கூறப்படுகின்றது.

பழம் என்னும் பொருளுடைய pomum என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து கலைச்சொல் Pomology உருவானது.

கனி என்னும் பொருளுடைய karpos என்னும் கிரேக்கச்சொல்லில் இருந்து கலைச்சொல் Carpology  உருவானது.

பழங்களுடன் விதைகளைப் பற்றியும் ஆயும் துறை.

சுருக்கமான

கனியியல் – Pomology / Carpology என்பது குறிக்கப் பெற்றுள்ளது.

Pomology / Carpology

1203. பழங்குடி வழக்கியல்

Agriology

1204. பழமொழியியல்

Paroemiology

1205. பள்ளிஉளவியல்

School Psychology

1206. பறவை நோக்கியல்

Ornithoscopy 

1207. கட்டமைப்புப் புவியியல்

Geotectology

1208. பறவைக்கூட்டியல்

Nidology

1209. பறவையியல்

பறவையியல் என்பது சரிதான். புள் என்றாலும் பறவைதான். “புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம்” என்கிறார் பாரதியார். ஆதலின் சுருக்கச் சொல்லாக முதலில் புள்ளியல் எனக் குறித்திருந்தேன். எனினும் வழக்குச் சொல்லையே பயன்படுத்தலாம் எனப் பறவையியல் எனக் குறித்துள்ளேன்.

Ornithology

   

(தொடரும்

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000