ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1356 – 1366 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1341 – 1355 இன் தொடர்ச்சி) |
1356. பேருருவியல் மடங்களின் பிறழ்வாய் வியல், பிறழ்வியல், விந்தை உயிரிக் கதைகள், விந்தை உரு பிறப்பியல், மாற்றுருவியல், பேருரு அறிவியல், சீர்கேட்டியல், தாவரவிரூபவியல், பூதப்பிறவி யியல் எனப் பலவாறாகக் கூறப்படுகின்றன. இவற்றுள் விரூபவியல் என்பது தமிழல்ல. அச்சப்பேருரு / கோர உரு என்னும் பொருள் கொண்டது. விந்தை உயிரிக் கதைகள் என்பது அறிவியலல்ல. இந்த இயல் தொடர்பான கட்டுக்கதைகள். கோர உரு என்னும் பொருள் கொண்ட téras என்னும் கிரேக்கச்சொல்லில் இருந்து Teratoஉருவானது. சுருங்கிய சொல்லான பேருரு இயல் > பேருருவியல் – Teratology (1) என்பதே இங்கு ஏற்கப்பட்டுள்ளது. |
Teratology (1) |
1357. பேருரு வடிவியல் |
Macromorphology |
1358. பேரெண்ணியல் |
Googology |
1359. பொது உளவியல் |
General Psychology |
1360. பொது ஒலிப்பியல் |
General Phonetics |
1361. பொதுமொழி யியல் |
General linguistics |
1362. பொதுச் சூலியல் |
General embryology |
1363. பொதுக் குமுகவியல் |
General sociology |
1364. பொதுச் சொற்பொருளியல் |
General semantics |
1365. பொதுத் திணைஇயல் |
General topology |
1366. பொதுப்பொறியியல் Civil – சீரியல், உரிமை யியல், நாகரிகமான, குடி முறைக்குரிய, பொது நிலை, குடிமை, உரிமையியல் எனப் பொருள்கள். Civil Engineering– கட்டடப் பொறியியல், குடிசார் பொறியியல், குடிமைப் பொறி யியல் எனப்படுகின்றது. Civil என்பது குடிமை என்ற பொருளில் பயன்படுத்துவதால் இதனையும் குடிமைப் பொறியியல் என்று கருதினர். நாட்டின் பணிகளை இரு பகுதியாகப் பிரித்துப் படைப் பணித்துறை என்றும் படைத் துறை அல்லாதவற்றைக் குடிமைப் பணித்துறை என்றும் குறிப்பிட்டனர். முதலில் அறிமுகமான பொதுப் பணிசார்ந்த என்பதையும் அவ்வாறே கருதினர். பின்னர் இதனைக் கட்டடப் பொறியியல் என்றனர். கட்டடப் பொறியியல்(architect engineering) தனியாக வளர்ந்ததும் அச் சொல்லும் பொருந்தியதாக இல்லை. எனவே, பொதுப்பொறியியல் – Civil Engineering எனப்படுகிறது. |
Civil Engineering |
(தொடரும்)
Leave a Reply