ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1381 – 1390 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1367 – 1380 இன் தொடர்ச்சி)
1381. பொறிசார் பூச்சியியல் |
Entomechology |
1382. பொறியியப் புவியியல் |
Engineering geology |
1383. பொறியியல் |
Engineering |
1384. போக்குவரத்துப் பொறியியல் ஊர்தி நடமாட்டப் பொறி யியல், போக்குவரத்துப் பொறி யியல் என இருவகையாகக் குறிக்கின்றனர். போக்குவரத்துப் பொறியியல் என்பதைத் தரப் படுத்திக் கொள்ளலாம். |
Transportation engineering/Traffic Engineering/ Transport Engineering |
1385. போசர் ஐன்சுதீன் புள்ளியியல் |
Bose Einstein Statistics |
1386. போட்டியியல் |
Agonistics |
1387. போரியல் pólemos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் போர். |
Polemology |
போர் நுட்பியல் |
Military technology |
1388. மகப்பேறு மகளிர் நோயியல் |
Obstetrics and Gynaecology |
1389. பேற்றியல் Obstetrics தாய்மை மருத்துவம், பேற்று மருத்துவம், மகப்பேறு தொடர்பான மருத்தவ இயல், மகப்பேறு மருத்துவம், ஈன் இயல், பேறு இயல், பிறப்பு இயல், பேற்றியல், மகப் பேற்றியல் எனப் பலவாறாகக் குறிக்கப் பெறுகிறது. அகராதிகளில் பற்று மருத்துவம் என்றும் குறிக்கப் பெற்றுள்ளது. மூலத்தரவில் பேற்று மருத்துவம் என்பது பிழையாகத் தட்டச்சிடப் பட்டிருக்கும். அதுவே பிறராலும் பகிரப்பட்டிருக்கும். பேறு காலத்திலும் மகப்பேற்றுக்குப் பின்னரும் பெண்கள் நலனில் கருத்து செலுத்தும் மகப்பேற்று மருத்துவம் என்பதைச் சுருக்கமாகப் பேறு + இயல் = பேற்றியல் – Obstetrics எனலாம். Obstetricius என்னும் இலத்தீன் சொல்லிற்கு மருத்துவச்சிக் குரிய என்னும் பொருள். பயன்பாட்டில் மகப்பேற்றின் பொழுதும் பின்னரும் மருத்துவச்சிப் பார்க்கும் மருத்துவத்தை அஃதாவது குழந்தைமை, தாய்மை மருத்துவத்தைக் குறிக்கிறது. Tókos என்னும் கிரேக்கச் சொல்லின்பொருள் மகப்பேறு. |
Obstetrics/ Tocology / Tokology
|
1390. பெண்ணோயியல் பெண்நோய் மருத்துவக் கலை, பெண்களின் நோய் களைப் பற்றிய ஆய்வியல் துறை, பெண்மைப் பிணியியல், மகளிர் நோய் இயல், மகளிர் நோய் மருத்துவ இயல், மகளிர் நோய் மருத்துவயியல், மகளிர்/ பெண்கள் மருத்துவம் எனப் படுகின்றன. எனினும் மகப்பேறு என்றும் கையாள்கின்றனர். இதனைத் தவிர்க்கலாம். கிரேக்கச் சொல்லில் இருந்து பிறந்த gynaeco- என்னும் முன்னொட்டு, பெண் என்னும் பொருள் கொண்டது. |
Gynaecology/ Gynecology |
(தொடரும்)
Leave a Reply