ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1391-1400 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1381 – 1390 இன் தொடர்ச்சி)
1391 பூந்தாதியல் – palynō / palúnō என்னும் பழங்கிரேக்கச் சொற்களின் பொருள்கள் தூவு/தெளி. இச்சொல் நுண்பொடி/ துகள்/ தூசி என்னும் பொருள் கொண்ட pálē என்னும் சொல்லில் இருந்து உருவானது. Palynology என்பதன் நேர் பொருள் தூளியல்/ துகளியல்(study of dust – இங்கே dust என்றால் தூசி எனக் கருதாமல் தூள்/துகள் எனக் கருத வேண்டும்). இந்த இடத்தில் துகள் என்றால் பூந்துகள்தான். மகரந்தம் எனப்படும் இதனைப் பூந்தாது என்றும் குறிப்பிடுவர். பூந்துகள் – மகரந்தம் – பூந்தாது குறித்த ஆராய்ச்சி என்பதைப் பூந்தாதியல் எனச் சுருக்கமாகக் குறிக்கலாம். எனவே, முதலில் பூந்துகளியல் எனக் குறித்ததை நீக்கிவிட்டேன். | Palynology(1) |
1392. மகளிர் உளவியல் | Feminine psychology |
1393. மகளிர் சிறுநீரியல் Uro என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சிறுநீர். Gynecology என்றால் மகளிர் சிறுநீரியல். எனவே, மகளிர் சிறுநீர்இயல் > மகளிர் சிறுநீரியல் – எனலாம். மகளிர் சிறுநீர்ப்பாதையியல் என்றும் குறிக்கின்றனர். எனினும் சுருக்கமாக மகளிர் சிறுநீரியல் எனலாம். | Urogynecology/ Urogynaecology |
1394. மக்கள் வரைவியல் Demo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் மக்கள். | Demographics |
1395. மக்கள்தொகையியல் Demo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் மக்கள். | Demology |
1396. மக்கள் வளைசலியல் Human Ecology– மக்கள் சூழியல், மனிதச் சூழியல் என இருவகையாகவும் கூறப்படுகின்றது. மன் என்பதன் அடிப்படையில் உருவான மனிதன் தமிழ்ச்சொல்தான். இருப்பினும் தமிழ்ச்சொல் அல்ல எனக் கருதி பழந்தமிழ்ச் சொல்லான மாந்தன் என்பதைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான கலைச்சொற்களில் Human என்பது மக்கள் என்றே பயன்படுத்துவதாலும் Ecology என்பதைச் வளைசலியல் எனக் கூற வேண்டும் என்பதாலும் மக்கள் வளைசலியல் – Human Ecology எனலாம். | Human Ecology |
1397. மணற்குன்று ஒப்புமையியல் | Sand hill analogy |
1398. மணி இயல் | Campanology / Gemology |
1399. மணிக்கல் செதுக்கியல் | Glyptology |
1400. மண்அமைப்பியல் | Soil Morphology |
(தொடரும்)
Leave a Reply