(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1434 – 1451 இன் தொடர்ச்சி)

1452. மருந்து வேதியியல்

Medicinal chemistry

1453. பவ்வீ இயல்

Coprology – மலத்தியல்,  கசட்டியல், மலத்தியல், மல இயல், சாண இயல், சாண வியல். சாண அறிவியல் எனப்படுகிறது. மாட்டின் மலம்தான் சாணம்.

சாணம், மலம் ஆகிய மூலப்பொருள் அடிப்படையில்  ,  சாணவியல் , மலவியல் எனக் கூறுகின்றனர். இரண்டும் சரிதான்.  ஆட்டின் கழிவு பிழுக்கை, குதிரையின் கழிவு இலத்தி, யானையின் கழிவு இலண்டம் முதலான பிற உயிரினங்களின் கழிவுகளையும்  ஆராயும் துறை. பொதுவாகக் குறிப்பதற்காக, மலத்தின் இடக்கரடக்கல் சொல்லான பவ்வீ என்ற சொல்லின் அடிப்படையில் பவ்வீ இயல் எனக் குறித்துள்ளேன்.

பவ்வீ என்றால் பகர வரிசையில் ஈகார எழுத்து.

Scatology / Coprology

1454. மலக்குடலியல்

Proctology

1455. மலை வானிலையியல்           

Mountain Meteorology

1456. மலையியல் 

Orology / Oreology

1457. மழலையர் உளவியல்

Infant Psychology

1458. மழை இயற்பியல்

præcipitation என்னும் பிரெஞ்சுச் சொல் மழையைக் குறிக்கிறது.

Precipitation Physics

1459. மழையியல் 

ombro என்பது இலத்தீனில் மழையைக் குறிக்கிறது.

Huetós என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மழை.

Ombrology / Hyetology

1460. மறிவினை யியல்

Reflexology

1461. மறுதலை பெயர்வியல்

Reverse logistics

1462. மறுதலை மரபியல்

Reverse genetics

1463. மறுப்பர் அறவியல்

Protestant Ethics

1464. மறுமையியல்

Eschatology –  அறுதி யியல், மறுமையியல், இம்மை மறுமை கோட்பாடு, அறுதி விளைவியல் எனப் பொருள்கள்.

வாழ்வின் இறுதிக்குப் பிந்தைய நிலை பற்றிய இவை யாவும் ஒரு பொருள் குறித்தனவே. நாம் சுருக்கமாகப்  பலரும் அறிந்த

மறுமையியல் – Eschatology என்றே சொல்லலாம்.

Éskhaton என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் இறுதி. அதிலிருந்து eschat உருவானது.

Eschatology

(தொடரும்

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000