(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1452 – 1464 இன் தொடர்ச்சி)

1465. மறையிடர் பொருளியல்

Risk – ஆபத்து,ஆபத்து காரணி, இழப்பு, இடர், அபாயம், அபாய நேர்வு, கெடு, கேடு, இன்னல், இடையூறு, இக்கு எனப் பல வகையாகக் குறிக்கப் பெறுகிறது. அதில் ஒரு இக்கன்னா இருக்கிறது எனப் பேச்சு வழக்கில் இயல்பாக உள்ள ‘இக்கு’ என்பதை நான் முதலில் பயன்படுத்தினேன். இதே சிந்தனை கொண்ட மற்றொருவரும் இச்சொல்லைப் பயன்படுத்தி வந்தார். இருப்பினும் இக்கு என்பதைக் கலைச்சொல் வடிவமாகப் பெரும்பான்மையர் கருதவில்லை. எனவே, வெளிப் படையாகத் தெரியாமல் எதிர்நோக்கப்படும் இடரை மறை இடர் என ஒருவர் குறிப்பிட்டதைப் பார்த்தேன். மறைஇடர் வரலாம், வராமலும் போகலாம். இச்சொல்லையே ஏற்றதாகக் கருதி இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இடர்ப்பு என்ற ஒற்றைச் சொல்லையும் நான் முன்னர்ப் பயன்படுத்தியுள்ளேன்.

Risk bearing Economics

1466. மறைவளி

மறைவளி (Krypton) என்பது மறை (Kr) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு வேதியியல் தனிமம் ஆகும்.

Krypton

1467. மன உடம்பியியல்

Psychophysiology

1468. மன மருந்தியல்

Phsychopharmacology

1469. மன வய இயல்

அறிதுயிலுமை (அறிதுயில் கலை/hypnotism) சொல் அறிமுக மாவதற்கு முன்னர் 1843இல்  இயேம்சு பிரெயிடு(James Braid) என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்டதே மனவய இயல்(Neurypnology)

Neurypnology

1470. மனக் குமுகவியல்

Psychosociology

1471. மனக் காட்சியியல்                                            Noology

noûs என்னும் பழங்கிரேக்கச் சொல்லின்

பொருள் மனம்.

1472. மனநடத்தையியல்

Cognitology

1473. மனநடையியல்

Nomology

1474. மனித உடம்பியியல்

Human Physiology

1475. மனிதமரபியல்

Human Genetics

1476. மனிதநேயஉளவியல்

Humanistic psychology

(தொடரும்

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000