சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன்
106. Abiding | கீழ்ப்படிகின்ற கடைப்பிடிக்கின்ற நெறிமுறைக்கு அல்லது விதிமுறைக்குக் கீழ்ப்படிகின்ற அல்லது அதனைக் கடைப்பிடிக்கின்ற செயல். |
107. Abiding interest | நிலை நலன் நிலையான அக்கறை அல்லது நிலையான ஆர்வம் கொண்டிருத்தலைக் குறிக்கிறது. ஒரிசா குத்தகைச் சட்டம், சொத்தில் நிலையான ஆர்வம் கொண்டவர், உறுதியாக .. . . . எப்போதும் நிலத்தில் நிலையான ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதில்லை என்கிறது. – இராதாமணி திப்பையா மற்றும் பிறர் எதிர் பிரசா மோகன் பிசுவால் மற்றும் பிறர் (Radhamani Dibya And Ors. Vs Braja Mohan Biswal And Ors. On 29 October, 1983)(AIR 1984 Ori 77, 1984 I OLR 72) |
108. Abidingly | நிலையான அக்கறை தொடர்ந்த ஆர்வம் நீண்டகாலமாகத் தொடரும் வகையில் அமைவது. |
109. Ability | திறமை வல்லமை, ஆற்றல் ‘சக்தி’ என்றும் சொல்லுவர். ‘க்’ மெய்யெழுத்து அடுத்த ‘க’ வரிசை எழுத்து தவிரப் பிற மெய்யெழுத்துகள் வருவதில்லை. எனவே, ‘சக்தி’ என்பது தமிழ்ச்சொல்லல்ல. பொறுப்பை ஏற்றுச் சுமப்பவர்களை(நிருவகிப்பவர்களை) ஆட்டாளி என்பர். உங்கள் காரியங்களுக் கெல்லாம் நான் ஆட்டாளியா? என்பது மக்கள் வழக்கு. நொய்ப்பம் என்பதும் வல்லமையைக் குறிக்கும் சொல். “மரக்கலம் அலையாதபடி கடைந்த நொய்ப்பம்” (நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருப்பாவை . 30, 254) என இலக்கியத்தில் வருகிறது. எப்பதவியாயினும் அதற்குரிய தகுதியுடையவரை அமர்த்த வேண்டும் என பதவிக்குரிய விதிகள் கூறும். |
110. Ability Test
திறனறி தேர்வு
ஆற்றலறி தேர்வு
திறனறி தேர்வு
வெவ்வேறு வேலை தொடர்பான இடுபணிகள்(tasks) அல்லது சூழ்நிலைகளில் ஒருவரின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான தரப்படுத்தப்பட்ட முறையாகும். ஒருவரின் ஏட்டுக்கல்வியைவிட உள்ளார்ந்த ஆற்றலை அளவிடுகின்றது. வேலைஅமைப்பில் ஒருவரின் செயல்திறனை அறிய பணியமர்த்துநரால் அவ்வப்பொழுது நடத்தப்படும் தேர்வாகும்.
இப்பொழுது மாணாக்கர்களிடையேயும் அவர்களின் தகுதிறனை அறிய திறனறி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply