சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 121-125
(சட்டச்சொற்கள் விளக்கம் 116-120 : இலக்குவனார் திருவள்ளுவன்)
சட்டச்சொற்கள் விளக்கம் 121-125
121. Abnegation | மறுதலிப்பு பொதுநலன் கருதித் தன் நலனைக் கைவிடல். |
122. Abnormal | இயல்நெறி பிறழ்ந்த, இயல்பிழந்த, இயல்புமீறிய அமைப்பு முறைகளுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகைமையில்லாத அல்லது இயல்பற்ற நிலைமைகள். |
123. Abnormality | பிறழ்மை பிறழ்வு இயல்பு அல்லாத நிலைமையை அல்லது இயல்பு கடந்த நிலைமையக் குறிப்பது. |
124. Abnormality of mind | இயல்புகடந்த மனநிலை இயல்பு திரிந்த மனநிலை இயல்பிலி மனம் மனத்திரிவு இ.த.ச.பிரிவு 84 மனநலமற்ற ஒருவரின் செயல் குறித்துக் கூறுகிறது. ஒரு செயலைச் செய்யும் பொழுது, மனநலமற்று இருந்தால் அல்லது செயலின் தன்மையை அறிய இயலாத நிலையில் இருந்தால் அவர் தவறான செயல் அல்லது சட்டமுரணான செயல் செய்திருந்தால் அது குற்றமாகாது. கருத்தரிப்பின் பின்னும் மகப்பேற்றிற்கு முன்னும் மகவு கண்டறியும் உத்தி(பாலியல் தேர்வுத் தடை)சட்டம், 1994, பிரிவு 2(ஓ)/2(ம) |
125. Aboard | ஊர்தியில் நீரில் / இருப்புப் பாதையில்/வானில் இயங்கும் ஊர்தியில் வானூர்தியில் தொடரியில்(தொடர் ஊர்தியில்) கப்பலில் à bord என்னும் பிரெஞ்சு தொடரிலிருந்து Aboard என்னும் சொல் பிறந்தது. ஒரு நிறுவனத்தில் பணியமர்த்தப்படும் பொழுது வரவேற்பதற்கும் இத்தொடர்(“Welcome aboard” ) பயன்படுகிறது. தொடரியோ கப்பலோ புறப்படும் பொழுதும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.(“All aboard!”) |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply