(சட்டச் சொற்கள் விளக்கம் 221-225 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 226-230

226. absolute privilege  வரையிலாச் சிறப்புரிமை  
நிபந்தனையற்ற சிறப்புரிமை அல்லது சலுகை உரிமை.

இது நிபந்தனையுள்ள சிறப்புரிமை அல்லது சலுகை உரிமையினின்றும் வேறுபட்டது.
227. absolute propertyமுழுச் சொத்துரிமை  

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததற்கு முன்னரோ, பின்னரோ, எய்தியிருந்த உடைமைக்கு வரையறுக்கப்பட்ட உரிமையாளராக இல்லாமல், முழு உரிமையாளராவார். (இந்து மரபுரிமையர் சட்டம், 1956, பிரிவு 14(1) )
228. absolute responsibility  முழுப் பொறுப்புரிமை    

முழுப் பொறுப்புநிலை (அரசின்‌) முழுநிலைப்‌ பொறுப்பு  

உள்நோக்கத்துடனோ கவனமின்மையாலோ இழைக்கப்பட்ட குற்றமாயினும் அரசு மீது பொறுப்பைச் சுமத்தும் பன்னாட்டுச் சட்டக் கோட்பாடு.
229. absolute restraint  முழுமைத் தடை   நிகழ்விற்கோ நூலுக்கோ அமைப்புக்கோ வேறு எதற்குமோ விலக்கு எதுவுமின்றி முழுமையான தடை விதிப்பது. பகுதித் தடையும் உண்டு என்பதால் முழுத் தடை கூறப்படுகிறது.
230. absolute restraint on alienationமாற்றாக்கத்தின் பேரில் முழுத் தடை   சொத்து அயன்மைப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகளின் ஆய்வு, பிரிவு 10

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்