சட்டச் சொற்கள் விளக்கம் 231-235 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 226-230 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 231 – 235
231. absolute right | முழு உரிமை முழு உரிமைகளை எக்காரணங் கொண்டும் மட்டுப்படுத்த முடியாது. எந்தச்சூழலும் முழுமையான உரிமைகளின் தகுதியையோ வரம்பையோநியாயப்படுத்த முடியாது. அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின்போதும் முழுமையான உரிமைகளை இடைநிறுத்தவோ கட்டுப்டுத்தவோ முடியாது. |
232. absolute title | முழுமை உரிமைமூலம் முழுவுரிமை மூலம் முழு உரிமை ஆவணம் முழு உரிமை யாவணம் முழுமையான நிறைவான உரிமையுடைமை. |
233. Absolute transfer | முழு உடைமை உரிமைமாற்றம் முழு மாற்றம், முழுமைப் பரிமாற்றம் தனிப்பட்ட சொத்தின் உரிமை மாற்றத்தை விற்பவர் வாங்குநருக்கு முழுமையாக மாற்றுதல். |
234. Absolute warranty | முழுப் பொறுப்புறுதி எல்லா வகை இழப்புகளுக்கும் சேதங்களுக்கும் பொறுப்புறுதி அளிப்பதே முழுமையான பொறுப்புறுதி ஆகும். இடர்ப்பாட்டால் ஏற்படும் செலவிற்கு மட்டுமல்லாமல், ஏந்துக்குறைவு, மன அழுத்தம் முதலியவற்றிற்கும் காப்புறுதி அளிப்பதே முழு பொறுப்புறுதி ஆகிறது. கடற்பயண முழுப் பொறுப்புறுதி எனவும் குறிக்கப் பெறும். |
235. Absolute, make | முழுமையாக்கு காண்க: Absolute |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply