(சட்டச் சொற்கள் விளக்கம் 231 – 235 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 236-240

236. Absolutelyமுற்றிலும்  

தனித்த
நிறைவாக
ஐயத்திற்கிடமின்றி

ஆம்.(உடன்பாட்டைக் குறிக்கையில் ஆம், சரி என்ற பொருளில் வரும்.)
237. Absolutely unavoidableமுற்றிலும் தவிர்க்க இயலாதது  

செய்தலோ செய்யாமையோ ஒதுக்கித் தள்ள வழியின்றி இன்றியமையாது நிகழ்த்தும் சூழலே முற்றிலும் தவிர்க்க இயலாதது ஆகிறது.
238. Absolve  விடுவி  

நீக்கு  
பழியினின்று நீக்கு
குற்றச்சாட்டினின்று விடுவி
கடமை அல்லது குற்றத்தின் விளைவுகளிலிருந்து விடுவிப்பது.  

நடுவர் மன்றம் குற்றவாளிகளை அவர்களின் குற்றங்களிலிருந்து விடுவிப்பது.  

கடன், கடமை, கடப்பாடு அல்லது பொறுப்பிலிருந்து விடுவித்தல்.
239. absolve from liabilityகடப்பாட்டிலிருந்து விடுவி  

மனச்சான்றைப் பிணைக்கும் கடப்பாட்டிலிருந்து அல்லது சட்டத்திற்குக் கட்டுப்படாமல் அல்லது பாவம் செய்ததன் விளைவுகளிலிருந்து விடுபடுவதை உணர்த்துகிறது.
240. Absolved(of charges)(குற்றச்சாட்டுகளிலிருந்து) விடுவிக்கப்படுதல்  

ஒருவர் அவர்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து அல்லது குற்றங்களிலிருந்து விடுவிக்கப்படுதல்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்