(சட்டச் சொற்கள் விளக்கம் 241-245 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 246-250

246. abstain. V  தவிர்;
விலக்கு
விலகியிரு;
தவிர்த்திரு (வி)  
விலகி யிருத்தல் ; தவிர்த்திருத்தல் (பெ)

  வாக்களித்தல் போன்ற எதிலும் பங்கேற்றுக் கொள்வதிலிருந்து விலகி யிருத்தல்.
247. Abstaine விட்டொழிப்பவர்  

ஒரு பழக்கத்தை விட்டொழிப்பவர்.

பொதுவாக போதை பொருள்களை உட்கொள்வதைக் கைவிடுவதைக் குறிப்பிடுகிறது.  

உணவைவிட்டொழிப்பவரைக் குறிக்குமிடத்தில் (உண்ணா)நோன்பு எனப் பொருளாகிறது.
248. Abstaining from carrying outநிறைவேற்றாதொழிதல்‌;

நிறைவேற்றாமல்‌ இருத்தல்‌
  திட்டத்தை/செயலை/தீர்மானத்தை/ நிறைவேற்றுதிலிருந்து விலகி அதனைத் தவிர்த்தல்.
காண்க: abstain
249. Abstaining from commission of any such offenceஅத்தகைய குற்றச்செயல்‌ எதையும்‌ செய்யாமல்‌  இருத்தல்‌ / செய்யாதொழிதல்    

குற்ற நடைமுறைத் தொகுப்பு இயல் 4 இல் குறிப்பிட்டுள்ள எந்த ஒரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்டால், தண்டனை வழங்கிய நீதிமன்றம் இன்றியமையாதது எனக் கருதினால், இத்தகைய குற்றத்தை மீளவும் செய்யாதிருக்க மூன்றாண்டுகளுக்கு மிகாத கால அளவிற்கானஒரு பிணைப்பத்திரத்தைப் பிணையுடனோ பிணையின்றியோ அளிக்க ஆணையிடலாம்.  

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.  (திருக்குறள் – 655) என்கிறார் திருவள்ளுவர்.  
காண்க: abstain
250. abstention. Nவாக்களிக்காமை   தவிர்த்தல்,

நடுநிலைமை தாங்குதல்.  

வாக்களிக்காமை என்பது சட்டப்படி வாக்களிக்கும் தகுதியாளர், வாக்களிக்காமையைக் குறிக்கிறது. இத்தகைய நேர்வுகளில் வாக்களிக்காமை எதிர்வாக்காகக் கருதப்படுகிறது.  

தவிர்ப்புக் கோட்பாடு(The abstention doctrine) என்பது கூட்டாட்சி நீதிமன்றங்கள் தம் அதிகார வரம்பிற்குள்  வழக்குகளை உசாவுவதைத் தடுக்கும் அதிகாரத்தைக் குறிப்பது. அதற்கு  மாற்றாக, மாநில நீதிமன்றங்களுக்கு வழக்கின் மீது அதிகாரம் அளிக்கிறது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்