சட்டச் சொற்கள் விளக்கம் 271-275 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 266-270 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 271-275
271. abuse of discretion | உளத்தேர்வின் பிழைபாடு முடிவெடுப்பதற்கு உளத்தேர்வைத் தவறாகப் பயன்படுத்தலை இது குறிக்கிறது. குற்ற வழக்கிலும் உரிமை வழக்கிலும் கீழமைவு மன்றங்களின் முடிவுகளை மறு ஆய்வு செய்கையில் மேல்முறையீட்டுமன்றம், உளத்தேர்வு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக என ஆராயும். discretion – விருப்புரிமை என்றுதான் சொல்லிவந்தனர். அவ்வாறாயின் விருப்பு வெறுப்பிற்கேற்ப எடுக்கும் முடிவு எனப் பொருளாகிறது. எனவே, அவரது மனம் தேர்ந்து எடுக்கும் முடிவு என்னும் பொருளில் மனத்தேர்வு அல்லது உளத்தேர்வு என்பது சரியாக இருக்கும். |
272. abuse of distress | தீங்கிட்டுப் பயன்கேடு கைப்பற்றல் பயன்கேடு ஒருவருக்கு ஏற்படட துயரச் சூழலைத் தவறாகப் பயன்படுத்தி ஆதாயம் அடைதல். கால்நடை அல்லது பிற உடைமைப் பொருள்களைக் கைப்பற்றியவர், அவற்றைத் தவறான நோக்கில் பயன்படுத்தல். |
273. abuse of jurisdiction | பணிமைப் பிழைபாடு பணிமை முறைகேடு பணிவரம்பைத் தவறாகப் பயன்படுத்தலைக் குறிக்கிறது. பணியாண்மை அதிகாரம், நேர்மையாகவும் கொடுக்கப்படட நோக்கத்திற்கான நன்னம்பிக்கையுடனும் செயற்படுத்தப் பட வேண்டும். எனவே, அதிகார மீறல் அல்லது பணிமைப் பிழைபாடு இருப்பின் நீதித்துறையின் மறு ஆய்விற்கு உட்படுத்தப்படும் |
274. abuse of monopoly of patent | தனிக்காப்புரிமையைத் தவறாகப் பயன்படுத்தல் முற்றுரிமைக் காப்புரிமையத் தவறாகப் பயன்படுத்தல் புதுப்புனைவுரிமை அல்லது காப்புரிமை பெற்ற பின் போதிய பயன்பாடு அல்லது பயன்பாடு இல்லாமல் செய்தல். |
275. abuse of power | அதிகாரப் பிழைபாடு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் பதவிநிலையில் உள்ள அதிகாரத்தைத் தனக்கு அல்லது தன்னைச்சார்ந்தவர்க்கு அல்லது இரு நிலையிலும் ஆதாயம் கிடைக்கும் வண்ணம் முறைகேடாகப் பயன்படுத்துதல். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply