சட்டச் சொற்கள் விளக்கம் 276-280 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 271-275 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 276-280
276. Abuse of process | சட்டநடவடிக்கை முறைகேடு சட்ட நடவடிக்கையைத் தீய எண்ணத்துடனோ தவறான நோக்கத்துடனோ தவறாகவோ பயன்படுத்துதல். சட்ட நடவடிக்கைகளில் முறைகேடு நிகழாமல் இருக்க முறை மன்றங்கள் கருத்து செலுத்துகின்றன. சட்ட நடைமுறைத் தகாப்பாட்டைத் தடுப்பதற்காக அல்லது நீதிமுறையின் நோக்கங்களைப் பாதுகாக்க மட்டுமே முறைமன்றம் மு.த.அ.(முதல் தகவல் அறிக்கையை) -ஐ இல்லாமல் ஆக்கலாம். குற்றமற்ற ஒருவர் தேவையின்றி வழக்கிற்கு உள்ளானால் அல்லது சரியான ஏதுக்கள் இன்றி உசாவல் தொடங்கப்பெற்றால் மு.த.அ. இன்மையாக்கப்படலாம். சட்டச் செயல்நிலைத் தவறாடல் சட்ட நடவடிக்கைத் தவறாடல் நீதிக்கட்டளை முறைகேடு வழக்கின் ஒரு தரப்பார், நேர்மையற்ற முறையில் எதிர்த் தரப்பாரைவிட நன்மையடையும் பொருட்டு நீதிமன்றத்தின் ஆணையைத் தவறாகப் பயன்படுத்துகை; சட்ட நடவடிக்கையைத் தன்னலம்கருதி முறைகேடாகப் பயன்படுத்துகை. |
277. Abuse of the process of court | நீதிமுறைக் கட்டளையைத் தவறாகப் பயன்படுத்துதல்/ முறைகெட்டவகையில் பயன்படுத்துதல் முறைமன்றச் செயல்முறை முறைகேடு நீதிமன்றச் செயல்முறை முறைகேடு காண்க: Abuse of process |
278. Abusing his position | பதவியைத் தவறாகப் பயன்படுத்தல் தன் பணிநிலையைப் பயன்படுத்தி, அடுத்தவரின் நிதி நலன்களைப் பாதுகாப்பார் அல்லது அவற்றுக்கு எதிராகச் செயல்படமாட்டார் தான் பொறுப்பு வகிக்கும் பதவி நிலையினைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட ஆதாயம் அடைந்தாலோ பிறருக்கு இழப்பினை ஏற்படுத்தினாலோ அதுவும் குற்றமே ஆகும். காண்க: abuse of power |
279. abusive language | வசைமொழி ஒருவரின் அல்லது அவர்சார்ந்த ஒன்றின் கண்ணியத்தை இழிவு படுத்தும் வகையில், கடுமையான, வன்முறையான, அவதூறான, இழிவான, ஏளனமான, இகழ்ச்சியான முறையில் தூற்றுதல். இனம்,பாலினம், நிறம், தோற்றம், சமயம், கட்சி, அமைப்பு ஆகியற்றின் மீதான இழிந்த ஏச்சுரைகளும் அடங்கும். காண்க : Abuse |
280. Abut | அடுத்துள்ள எல்லையோடு எல்லை ஒட்டியிரு சொத்துச்சட்டம் நில உடைமையாளர்களின் அடுத்துள்ள எல்லை உரிமை குறித்து குறிப்பிடுகிறது. பொதுச்சட்டதின் கீழ்ப் பொதுச்சாலை அல்லது நடைபாதை ஒட்டியுள்ள சொத்துரிமையாளர்கள் அவற்றைப் பாதுகாக்க வைக்க வேண்டிய கடப்பாடு உள்ளவர்கள் அல்லர். சில அகராதிகளில் ‘அண்டைக்கட்டு’ எனக் குறிப்பிடப்படுகிறது. அண்டை கட்டு என்பது, ஓருறுப்பில் உண்டான கட்டி அல்லது காயத்தின் விளைவாக மற்றோருறுப்பில், பொதுவாகக் கமுக்கூட்டில் அல்லது கீழ்முதுகுப்பகுதியில் அல்லது வீக்கம் தோன்றுதலைக்குறிக்கும் நோயாகாகும். எனவே, இங்கே பயன்படுத்த வேண்டா. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply