(சட்டச் சொற்கள் விளக்கம் 281-285 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

286. Academic course  கல்விசார் பாடப்பிரிவு  

பாடநூற் கல்வி,

செயல்முறை சாராப் படிப்பு

பாடநூல்களின் மூலம் மட்டுமல்லாமல் பாடத்திட்டம் சார்ந்த செயல் முறை மூலமும் கற்பிக்கப்படுவதே செயல்முறைக் கல்வி. பாடநூல்களை மட்டும் அடிப்படையாகக்  கொண்டு கற்பிக்கப்படுவது பாடநூற்கல்வி்.  
287. Academic experienceகல்விப் பட்டறிவு  

கல்விப் பணியறிவு  

கல்வி வாழ்க்கை தொடர்பான  மாணவர் பெறும் பட்டறிவும் கல்வித்துறையில் பயிற்றுவிப்பில் பணியாற்றுநர் பெறும் பணியறிவும்.
288. Academic laurelsகல்வி விருது  

கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தால் உயர்ந்த முறையில் படிப்பை முடித்து வாகை சூடியமைக்காக   வழங்கப்பெறும் விருது.
Academic sessionகல்வி அமர்வு  

கல்விப்பருவம்  

நாட்காலம் எனில் வகுப்புகளை நடத்தும் நேரம்.  

குறிப்பிட்ட கால அளவைக் குறிக்கையில் கோடைப்பருவம், குளிர் பருவம்  என்பதுபோல் கல்விப்பருவம் எனப்படும்.
Academic staffகல்விப் பணியாளர்கள்  

கல்வித்திட்டத்துடன் தொடர்புடையவர்கள்.

(தொடரும்)