சட்டச் சொற்கள் விளக்கம் 296-300: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 291-295: இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 296-300
296. accede | இணங்கு பதவிகொள், இணைந்துகொள், முன்வந்து ஏற்றுக்கொள். கூட்டுச் சேரு ஒப்புதல் தெரிவிக்க அல்லது இசைவளிக்க அரசு வேண்டுகை அலலது கோfரி்கையை ஏற்றுக் கொள்ளல் ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கையில் ஒரு தரப்பாகச் சேருதல் பதவியில் சேருதல் accēdō என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அணுகுதல் இதிலிருந்து உருவான சொல் accede. |
297. acceded | ஏற்றுக்கொள்ளப்பட்டது ஒப்புக் கொள்ளப் பட்டது. இசைவு கொடுக்கப்பட்டது. காண்க: accede |
298. acceding state | இணையும் நாடு ஓர் ஆட்சிப்பரப்பில் இணையும் மற்றொரு நிலப்பகுதி அல்லது மாநிலம் அல்லது நாடு. தமிழ்நாடு மாநிலம் எதிர் கேரள மாநிலமும் மற்றொருவரும். |
299. accelerate | முடுக்கிவிடு விரைவாக்கு வேகமாக நகர: வேகம் பெற வழக்கத்தை விட வேகமான தர வளர்ச்சி ஒப்பந்தத்தை மீறும் நேர்வில் சில கடமைகள் உடனடியாக செலுத்தப்படும் என்று குறிப்பிடும் ஓர் ஒப்பந்தத்தில் உள்ள ஒரு பிரிவு முதலியன |
300. accelerated | விரைவு படுத்தப்பட்ட விரைவாக நகருதல் அல்லது எதையாவது விரைவாக அல்லது உடனடியாக இயங்கச் செய்தல் மகிழுந்து, பேருந்து போன்ற பொறி ஊர்தியை விரைவாகச் செல்லச் செய்தல் |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply