சட்டச் சொற்கள் விளக்கம் 531-540 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 521-530 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 531-540
531. Acquired Company | நிறுவனத்தைப் பெறுதல் ஒரு நிறுவனம், மற்றொரு நிறுவனத்தின் மீதான உரிமையை வாங்கிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வணிக நடவடிக்கையாகும். |
532. Acquired Evidence | சான்றாதாரம் அல்லது சான்றாதாரங்கள் அடைதல் உண்மையை அல்லது குற்றத்தை மெய்ப்பிப்பதற்காக அடையப்படும் சான்று. |
533. Acquired Immunity | நோய்மி எதிர் அடைவு நோய்த் தடுப்பாற்றலைப் பெறுதல். நோய்த்தடுப்பு மருந்தினைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற்றுக்கொள்ளல். |
534. Acquired Information | தகவல்களைப் பெறுதல் மற்றொரு தரப்பார் அல்லது உறுப்பினர்பற்றிய கமுக்கத் தகவல்களைப் பெறுதல். தன் அல்லது தன் நிறுவன வளர்ச்சிக்கான விவரங்களை அல்லது எதிர்த்தரப்பார் குறித்த தகவல்களை நேர்முகமாகவோ பிறர் வழியாகவோ நேர்வழியிலோ குறுக்கு வழியிலோ பணமோ பொருளோ ஆதாயமோ இவற்றில் இரண்டோ மூன்றோ அளித்துப் பெறுதல். எனினும் நேர்மையான முறையில் பெறும் தகவல்களே நலம் சார்ந்தவை. |
535. Acquired Knowledge | அறிவைப் பெறுதல் கல்வி, கேள்வி, படிப்பு, ஆராய்ச்சி மூலம் அறிவைப் பெறுதல் |
536. Acquired Land | நிலம் கையகப்படுத்தல் பொதுமக்களின் தனியார் நிலத்தைப் பொதுநன்மை கருதி ஒன்றிய அல்லது மாநில அரசு போதிய இழப்பீடு அளித்துத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது. |
537. Acquired Property | அடைவு உடைமை சொந்த வருவாயிலிருந்து அடைந்த உடைமை தன்னடைவு உடைமை. மூதாதையர் மரபு வழி அடையும் உடைமை மரபு அடைவு உடைமை. |
538. Acquired Reputation | புகழ் எய்தல் நற்பெயர் பெறுதல் நற்செயல்கள்/ நற்பணிகள் / நல்ல திட்டங்கள் / நேர்மையான முறைகள் போன்ற நல்ல வழிகளில் புகழைப் பெறுதல். |
539. Acquired Right | பெறப்பட்ட உரிமைகள் தனக்குரிய அல்லது தன் நிறுவனத்திற்குரிய உரிமைகளை அடைதல். ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மீதான மீற முடியாத தன்மையைக் குறிக்கிறது. பணியில் சேருநரின் அடிப்படை உரிமையாக வரையறுக்கப்பட்டிருக்கலாம். |
540. Acquirer | ஈட்டுநர் உழைப்பினால் ஒன்றை உடைமை கொள்பவர் (பி.2(அ) இ.க.ஆ.ச./H.G.L.A.) கொள்பவர், வாங்கியவர், கைப்பற்றிய நிறுவனம் |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply