சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:151-155
(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:146-150 – தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் : 151-155
151. Above mentioned | மேற்குறிப்பிட்ட மேற்குறித்துள்ள முன்னர்ச் சொன்னதை எடுத்துரைப்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர். எனினும் மேலே தெரிவிக்கப்பட்ட என்பதை முந்தைய பக்கங்களில் என்றில்லாமல் அதே பக்கத்தில் மேலே எனக் கருதும் வெற்றுரையாகக் கருதித் தவிர்க்க வேண்டுகின்றனர் சட்ட வல்லுநர்கள். இந்த இடங்களில் மேலே என்பதைவிட /முன்னதாக முன்னால் /ஏற்கெனவே/ முந்தைய என்று குறிப்பிடத் தெரிவிக்கின்றனர். |
152. Above normal | இயல்பின் மிகுந்த இயல்பினும் மேலான இயல்பான நிலைக்கு மேம்பட்ட நிலையைக் குறிப்பது |
153. above par | சமநிலைக்கு மேல் மிகு விலையில் இயல்பை விட அல்லது எதிர்பார்த்தை விடச் சிறந்தது. பொதுவாகப் பத்திரங்கள், பங்குகள் போன்றவை அவற்றின் முகமதிப்பை விட மிகுதியாக விற்கப்படுவதைக் குறிப்பிடுகின்றனர். |
154. Above quoted | மேலே எடுத்துரைக்கப்பட்ட இதே நீதிபதியோ வேறு வழக்குகளில் வேறு நீதிபதிகளோ தீர்ப்புரையில் தெரிவித்த கருத்தை மேற்கோளாக எடுத்துரைப்பது. வாதுரைஞர்கள் அல்லது வழக்குரைஞர்களும் வேறு தீர்ப்புரைகளில் இருந்து தம் வாதத்திற்கு வலு சேர்க்கும் தீர்ப்பின் பகுதியை எடுத்துக்காட்டி மேற்கோளாகக் கூறுவர். |
155. Above said | மேற்சொன்ன அதே பக்கத்திலோ முந்தைய பக்கத்திலோ சொன்னதைக் குறிப்பிடல் |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply