சட்டச் சொற்கள் விளக்கம் 971-975 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 966-970 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 971-975
971. Attestation | சான்றொப்பம் சான்றுக் கையொப்பம் நிறைவேற்றுநர் ஒப்பாவணத்தில் கையொப்பம் இட்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் பொருட்டுச் சான்றாளர் தமது பெயரைக் கையொப்பமாக இடுவது (பி 69, இ.சா.ச.). இ.சா.ச. பிரிவு 69 என்பது இந்தியச் சான்றுரைச் சட்டத்தின் (Indian Evidence Act) 69 ஆவது பிரிவைக் குறிக்கிறது. இது சான்றுரையின் சான்றளிப்பு (attestation) பற்றி விவரிக்கிறது. இறுதி முறியின் சான்றளிப்பு, சான்றுரைஞர் கையெழுத்திடுவதைப் பார்த்ததாகக் கூறினால் போதுமானது, தற்செயல் சான்றுரைஞர் சான்றளித்த சான்றுரையைப் பார்த்ததாகக் கூறினால் போதுமானதல்ல. நீதிமுறைப் புலனாய்வில் ஒரு பொருளியத்தை மெய்ப்பிக்கவோ பொய்ப்பிக்கவோ உதவும் சட்ட வழிவகை சான்று பொருள் தந்து உள்ளடக்குவதாவது (பி 3, இ.சொ.ச.). “இ.சொ.சட்டம்” என்பது “இந்தியச் சொத்துரிமை இடமாற்றச் சட்டம் 1882” (Transfer of Property Act, 1882) என்ற சட்டத்தின் சுருக்கமான வடிவம் ஆகும். இது சொத்துரிமைகளை மாற்றுதல், பரிமாற்றங்கள், சொத்துரிமைகளின் மீதான உரிமைகளை ஒழுங்குபடுத்துவது பற்றி விவரிக்கிறது. காண்க: Attest |
972. Attesting witness (attestor, attester) | சான்றொப்பமிடுநர் சான்றுக் கையொப்பமிடுபவர் எனச்சொல்வதைவிடச் சுருக்கமாகச் சான்றொப்பமிடுநர் எனலாம். testis என்பது இலத்தீன் சொல்லாகும். இதன் உயிரியல் பொருள் முள்ளெலும்பியின் விதைப்பை. மற்றொரு பொருள் மூன்றாம் தரப்பின் நிலைப்பாடு. அஃதாவது சான்றுரை களிலோ வாதாட்டத்திலோ மூன்றாம் தரப்பினராக இருத்தல். மூன்றாம் தரப்பு சான்று அளிப்பவராக இருக்கிறார். அதனடிப்படையில் இச்சொல்லில் இருந்து உருவானதே attest. இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு attestor, attester என இரு சொற்கள் உருவாயின. attester என்பது பொதுவாகவும் முன்மையானதாகவும் (preferred) பயன்படுத்தப்படுகிறது. attestor என்பது பொதுவாக வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனைச் ஆவணச் சான்றர் எனலாம். |
973. Attitude | மனநிலை போக்கு சட்டத்தில், ஏதோ அல்லது ஒருவரைப் பற்றிய ஓர் உணர்வு அல்லது கருத்து, அல்லது இதன் காரணமாக ஏற்படும் நடத்தை முறை. |
974. Attorn | மற்றொருவருக்கு மாற்று புதிய நிலக்கிழாரைச் சட்டப்படி ஒப்புக்கொள் ஒரு குத்தகைதாரராக ஒருவரின் கட்பாடுகளை ஒரு புதிய நில உரிமையாளருக்கு மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்தல். ஒருவரின் பூசலில் அல்லது வாதாட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நீதிமன்றத்தின் அதிகார வரம்பை ஒப்புக்கொள்ளுதல். |
975. Attornment | வாடகைதாரரின் ஏற்பு புது நிலக்கிழாரை ஏற்றல் மாற்று மேலாண்மை ஏற்பு உரிமையாளரை ஏற்றல் சொத்தை வாங்கிய அல்லது கையகப்படுத்திய புதிய நிலக்கிழாரை நிலக்குடிவாரர் ஒப்புக்கொள்ளுகை (ச.சொ. 1983) |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply